tamilkurinji logo


 

கூகிள் ப்ளஸ்ஸில் புது வசதி: Google+ Pages,கூகிள் ப்ளஸ்ஸில் புது வசதி: Google+ Pages

கூகிள்,ப்ளஸ்ஸில்,புது,வசதி:,Google+,Pages




கூகிள் ப்ளஸ்ஸில் புது வசதி: Google+ Pages

First Published : Thursday , 10th November 2011 12:30:54 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


கூகிள் ப்ளஸ்ஸில் புது வசதி: Google+ Pages,கூகிள் ப்ளஸ்ஸில் புது வசதி: Google+ Pages



பேஸ்புக் தளத்திற்கு மாற்றாக களமிறங்கியுள்ள கூகிள் ப்ளஸ் தளம் புதுப்புது வசதிகளாக அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது Facebook Fan Pages-க்கு மாற்றாக Google+ Pages என்னும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் Facebook Fan Page போன்று கூகிள் ப்ளஸ்சிலும் தனிப்பக்கம் உருவாக்கலாம்.

நமது தளத்திற்கு கூகிள் ப்ளஸ் பக்கம் உருவாக்குவது எப்படி? என்று பார்ப்போம்.

1. முதலில் https://plus.google.com/pages/create
என்ற முகவரிக்கு செல்லுங்கள்.


2. அங்கு இடது புறம் Product or Brand என்பதை க்ளிக் செய்யுங்கள்.

3. Page Name என்ற இடத்தில் உங்கள் தளத்தின் பெயரையும்,

4. Website என்ற இடத்தில் உங்கள் தள முகவரியையும் கொடுங்கள்.

5. select a category என்ற இடத்தில் Website என்பதை தேர்வு செய்யுங்கள்.

6. அதற்கு கீழே யாரெல்லாம் உங்கள் பக்கத்தை பார்க்கலாம்? என்பதற்கு Any Google+ Users என்பதை தேர்வு செய்யுங்கள். அல்லது உங்கள் தளத்திற்கு ஏற்ற மற்றவற்றை தேர்வு  செய்யுங்கள்.

7. அதற்கு கீழே உள்ள இரண்டு பெட்டியிலும் டிக் செய்யுங்கள்.

8. பிறகு Create என்பதை க்ளிக் செய்யுங்கள்.



9. பிறகு வரும் பக்கத்தில் Tagline என்ற இடத்தில் ஏதாவது கொடுக்கலாம். அல்லது வெறுமனே விட்டுவிடலாம். Profile படம் ஏதாவது சேர்த்து Continue என்பதை சொடுக்கவும்.



10. பிறகு வரும் பக்கத்தில் நீங்கள் உருவாக்கிய பக்கத்தை கூகிள் ப்ளஸ் தளத்தில் பகிரலாம். பிறகு பகிரலாம் என நினைத்தால் Finish என்பதை சொடுக்கவும்.


11. அடுத்து Get Started என்னும் பக்கம் வரும். கூகிள் ப்ளஸ் பக்கத்தின் அடிப்படைகளை இங்கு காணலாம்.

Connect Your Website - பேஸ்புக் லைக் பாக்ஸ் போன்று கூகிள்+ பக்கத்தின் Badge வைக்க Get a Badge என்பதை க்ளிக் செய்தால் உங்களுக்கான Code இருக்கும். அதனை உங்கள் தளத்தில் வைக்கலாம். தற்போது ஐகான் வைக்கும் வசதி மட்டும் தான் உள்ளது. பேஸ்புக் லைக் பாக்ஸ் போன்ற வசதிக்கான Code விரைவில் வரும் என்று கூறியுள்ளது. அது வந்த பின் இது பற்றி பார்ப்போம்.

Tell the world - இந்த இடத்தில் உங்கள் பக்கத்தின் முகவரி இருக்கும். மற்றவர்களுக்கு சொல்லலாம்.

நீங்கள் பக்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் போது மேலே பின்வருமாறு இருக்கும்.


அதில் Ok  என்பதை சொடுக்கவும். பேஸ்புக் ரசிகர் பக்கத்தில் User Mode & Page Mode என்று பார்த்தோம் அல்லவா? அதே தான் இது. நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இதனை மாற்றிக் கொள்ளலாம்.


இடது புறம் உங்கள் பக்கத்தின் பெயருக்கு கீழே Drop Down Icon இருக்கும். அதை சொடுக்கி மாறிக் கொள்ளலாம்.

உங்கள் கூகிள்+ பக்கத்தின் முகப்பு பக்கம் பின்வருமாறு இருக்கும்.



Edit Profile என்பதை சொடுக்கி உங்கள் பக்கத்தின் தகவல்களை மாற்றிக் கொள்ளலாம். Share Your Page என்பதை சொடுக்கி உங்கள் பக்கத்தை பகிர்ந்துக் கொள்ளலாம்.
- ப்ளாக்கர் நண்பன்

கூகிள் ப்ளஸ்ஸில் புது வசதி: Google+ Pages,கூகிள் ப்ளஸ்ஸில் புது வசதி: Google+ Pages கூகிள் ப்ளஸ்ஸில் புது வசதி: Google+ Pages,கூகிள் ப்ளஸ்ஸில் புது வசதி: Google+ Pages கூகிள் ப்ளஸ்ஸில் புது வசதி: Google+ Pages,கூகிள் ப்ளஸ்ஸில் புது வசதி: Google+ Pages
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காற்றில் செல்போன் சார்ஜ் ஏற்றும் கருவி கண்டுபிடிப்பு
பரமக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காற்றில் இருந்து மின்சாரம் தயார் செய்து அதன்மூலம் செல்போனை சார்ஜ் ஏற்றி வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பொன்னையாபுரத்தைச்சேர்ந்தவர் பிலவேந்திரன் மகன் பீட்டர்ஜான். எலக்ட்ரிகல் பணி செய்து வரும் இவருக்கு புது கண்டிபிடிப்புகளை தயார் செய்வதில்

மேலும்...

 விரும்பாத கூகுள் பிளஸ் கணக்கை நீக்குவது எப்படி?
ஆரம்பத்தில் யாரேனும் கூகுள் பிளஸில் இணைந்து கொள்ள அழைப்பு கொடுத்தால் மட்டுமே இணைய முடியும் என்றிருந்தது. இப்போது அனைவருக்கும் கூகுள் பிளஸின் வாசல் திறந்திருக்கிறது. நீங்கள் கூகிள் பிளஸை கணக்கை அழிக்க விரும்புகிறீர்களா.பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.பயப்பட வேண்டாம், இதனால் உங்கள் ஜிமெயில்,பிளாக்கர் கணக்குகள்

மேலும்...

 மெதுவான இணைய இணைப்பில் வேகமாக உலாவ ! ! !
இணையம் என்பது இந்த உலகில் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது . நாம் அனைவரும் இணையத்தில் உலாவுவதை தான் மிகவும் விரும்புகிறோம் . அனைவரும் அவரது சமூக வாழ்கையிலும் மற்றும் நடைமுறை வாழ்கையிலும் இணைவதற்கு இணையம் இன்றியமையாததாக மாறிவிட்டது.அதனால் அனைவருக்கும் வேகமான

மேலும்...

 கூகிள் தேடலில் உடனடி பதில்கள்
கூகுள் தேடுபொறியை பயன்படுத்தாத இணைய பயனாளர்கள் யாருமில்லை என்று கூட சொல்லலாம். அந்தளவு கூகுள் தேடுபொறி அனைவருக்கும் பயன்படுகிறது. ஒரு சில தேடல்களுக்கு உடனடி முடிவுகளை தருகிறது கூகிள் தளம். அதனை பற்றி இங்கு பார்ப்போம். உலக  நேரம்: உலக நாடுகளில் தற்போதைய நேரத்தை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in