கெய்ல் அதிரடி சதம் வீண்

கெய்ல் அதிரடி சதம் வீண்
இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கேல் அதிரடியாக 62 பந்தில் 151 ரன் விளாசியும்  சாமர்செட் அணி பரிதாபமாக தோல்வியைத் தழுவியது. டான்டன் கவுன்டி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், டாசில் வென்று முதலில் பேட்  செய்த கென்ட் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன் குவித்தது. பெல் டிரம்மாண்ட் 51, கேப்டன் சாம் நார்த்ஈஸ்ட் 114 ரன் (58 பந்து, 16  பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர்.

பில்லிங்ஸ் 24, ஸ்டீவன்ஸ் 22 ரன் எடுத்தனர். அடுத்து 20 ஓவரில் 228 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய சாமர்செட்  அணி, 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்து 3 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

தொடக்க வீரராகக் களமிறங்கிய கிறிஸ் கேல் 151 ரன் விளாசி (62 பந்து, 10 பவுண்டரி, 15 சிக்சர்) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற  வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தால் சாமர்செட் அணி நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது. கேல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
https://goo.gl/VDYSzH






15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்