கேப்டன் பதவியில் இருந்து டோனியை நீக்க வேண்டும்- பிஷன்சிங்பெடி

கேப்டன் பதவியில் இருந்து டோனியை நீக்க வேண்டும்- பிஷன்சிங்பெடி
டோனி தலைமையிலான இந்திய அணி வெளிநாட்டு மைதானத்தில் டெஸ்ட் தொடரை இழப்பது வாடிக்கையாகிவிட்டது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா பயணங்களிலும் 4 டெஸ்டிலும் தோற்று ‘ஒயிட்வாஷ்’ ஆகி இருந்தது. கடந்த டிசம்பர் மாதம் தென்ஆப்பிரிக்க பயணத்தில் டெஸ்ட் தொடரை 0–1 என்ற கணக்கில் இழந்தது. தற்போது நியூசிலாந்திலும் டெஸ்ட் தொடரை இழந்து உள்ளது.

இதனால் கேப்டன் டோனி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். மேலும் அவர் தற்காப்பு ஆட்டத்தில்தான் கவனம் செலுத்துகிறார். இதனால்தான் வெலிங்டன் டெஸ்டில் வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டார் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார்.

டோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்குவது பற்றி மறு ஆய்வு செய்யும் நேரம் இது என்று முன்னாள் கேப்டன் பிஷன்சிங் பெடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

பணத்தால் பல்வேறு கிரிக்கெட் வீரர்களை வாங்கலாம். ஆனால் திறமையை பணத்தை கொண்டு வாங்க முடியாது. கடந்த 3 ஆண்டுகளாக இந்திய அணி வெளிநாட்டில் டெஸ்டில் வெற்றி பெறவில்லை.

இதனால் கேப்டன் பதவியில் இருந்து டோனி மற்றும் பயிற்சியாளர் பிளாட்சரை நீக்குவது பற்றி மறு ஆய்வு செய்ய இதுவே சரியான நேரம். இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
https://goo.gl/rGfeXG


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்