கேரட் நூக்கல் பொரியல் / Carrot Broccoli poriyal
First Published : Tuesday , 6th September 2016 10:54:56 AM
Last Updated : Tuesday , 6th September 2016 10:54:56 AM
தேவையானவை:
நூக்கல் நறுக்கியது - 2
கேரட் நறுக்கியது - 2
சின்ன வெங்காயம்நறுக்கியது - 4
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
வேக வைத்த துவரம் பருப்பு- 3 ஸ்பூன்
துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
எண்ணெய் 2 ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
உளுந்து - கால் ஸ்பூன்
கறிவேப்பிலை
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுந்து கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இவை சற்று வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள கேரட்,நூக்கல் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, தேவைாயன அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கடாயை மூடி 10 நிம்டம் சிம்மில் வைக்கவும்
காய் நன்கு வெந்த பின் வேக வைத்த பருப்பை சேர்த்துக் கிளறிவிட்டு ,தேங்காய்ப்பூ, சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சுவையான சத்தான கேரட் நூக்கல் பொரியல் ரெடி