கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்

கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்
 வன்கொடுமை சட்டம் மற்றும் நிரந்தர தொழிலாளர் சட்ட விதிகளில் திருத்தம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பல்வேறு அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

கேரளாவில் போராட்டம் நடைபெறுவதால் பாதுகாப்பு கருதி கன்னியாகுமரியிலிருந்து கேரளாவிற்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.


மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. நாகர்கோவில், தக்கலை உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து கேரளாவிற்கு தினசரி 44 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் போராட்டம் நடைபெற்று வருவதால் இன்று களியக்காவிளை வரை மட்டுமே ஒருசில பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. குருவாயூர், எர்ணாகுளம், கொச்சி செல்லும் தமிழக அரசு விரைவு பேருந்துகளும் இன்று இயக்கப்படவில்லை.

பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமாக நெல்லை மாவட்டம் தென்காசி வழியாக காய்கறிகள், விளைபொருட்கள், பால் உள்ளிவை கொண்டு கேரளாவிற்கு செல்லப்படும். இந்நிலையில் இன்று போராட்டம் காரணமாக எதுவும் கொண்டுசெல்லப்படவில்லை.

இதனால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் குறித்து எவ்வித முன்னறிவிப்பும் இல்லாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
https://goo.gl/pNwpLj


18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை

10 Dec 2018

நாடு முழுவதும் செங்கல் மூலம் கட்டிடம் கட்டத் தடை: மத்திய அரசு திட்டம்

16 Oct 2018

நாளை நடைதிறப்பு - சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு

11 Oct 2018

மசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு

10 Oct 2018

சிறுமி பலாத்காரம் “என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்