கோமியத்தில் இருந்து மருந்து 8 வகை மருந்து தயாரிக்க உத்தரபிரதேச அரசு முடிவு

கோமியத்தில் இருந்து மருந்து 8 வகை மருந்து தயாரிக்க உத்தரபிரதேச அரசு முடிவு
நமது நாட்டில் ஆதிகாலத்தில் இருந்தே மாட்டு சிறுநீர் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிலவகை ஆயுர்வேத மருந்துகளை நாட்டு வைத்தியர்கள் மாட்டு சிறுநீர் மூலம் தயாரித்து வருகிறார்கள்.

இதேபோல வீட்டு தரையை சுத்தப்படுத்துவதற்கு மாட்டு சிறுநீரால் தயாரிக்கப்பட்ட திரவத்தை பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் உத்தரபிரதேச அரசு மாட்டு சிறுநீரில் இருந்து 8 வகையான ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் மாநில ஆயுர்வேத துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆயுர்வேத துறையின் இயக்குனர் ஆர்.ஆர். சவுத்ரி நிருபர்களிடம் கூறியதாவது:-

நமது நாட்டில் ஏற்கனவே ஆயுர்வேத மருத்துவ முறையில் மாட்டு சிறுநீர் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நாங்கள் ஆய்வுகளை மேற்கொண்டோம். உத்தரபிரதேசத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், பல்வேறு வகை மருந்துகளை தயாரிக்கலாம் என கண்டுபிடித்துள்ளோம். அதன்படி ஈரல் நோய்களை தடுக்கும் மருந்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து, மூட்டு வலியை குறைக்கும் மருந்து உள்ளிட்டவை தயாரிக்க முடியும்.

எனவே இந்த வகையில் 8 மருந்துகளை தயாரிக்க இருக்கிறோம். மேலும், மாட்டு சிறுநீர் தொடர்பான ஆராய்ச்சிகளை விரிவுபடுத்த உள்ளோம். இதன்மூலம் மேலும் பல மருந்துகள் தயாரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

உத்தரபிரதேச ஆயுர்வேத துறைமூலம் லக்னோ, பிலிபட் ஆகிய இடங்களில் மருந்து தயாரிப்பு நிறுவனம் உள்ளது. மேலும் தனியார் நிறுவனம் ஒன்றும், அரசுடன் இணைந்து மருந்து தயாரித்து வருகிறது. அவற்றின் மூலம் இந்த மருந்துகள் தயாரிக்கப்படும்.

மேலும் மாட்டு பால், நெய் ஆகியவற்றில் இருந்தும் பல மருந்துகளை தயாரிப்பதற்கு முயற்சித்து வருகிறோம். எங்கள் மாநிலத்தில் 8 ஆயுர்வேத மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அதில் இந்த வகை மருந்து தயாரிப்பு பற்றிய பாடங்களும் வைக்கப்பட்டுள்ளன.

மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளுக்கு தினமும் அதிக நோயாளிகள் வருகின்றனர். லக்னோ ஆஸ்பத்திரிக்கு மட்டுமே 700-லிருந்து 800 பேர் வரை வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்


19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்

06 Feb 2019

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உயர் நீதிமன்றம் உத்தரவு

02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை