tamilkurinji logo
 

கோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் கைது,Kannada-actor-Duniya-Vijay-arrested-in-Tamil-Nadu.v

Kannada-actor-Duniya-Vijay-arrested-in-Tamil-Nadu.v




கோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் கைது

First Published : Friday , 8th June 2018 08:08:04 PM
Last Updated : Friday , 8th June 2018 08:08:04 PM


கோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா  விஜய் கைது,Kannada-actor-Duniya-Vijay-arrested-in-Tamil-Nadu.v

கடந்த வருடம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பின்போது 2 துணை நடிகர்கள் அணையில் இருந்து தவறி விழுந்து இறந்தனர். இது தொடர்பாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கோர்ட்டில் ஆஜராகாததால் தயாரிப்பாளர் சுந்தரை  கைது செய்ய  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுந்தரை கைது செய்வதற்காக அவரது வீட்டுக்கு விரைந்தனர்.

சுந்தரின் வீட்டில் கன்னட நடிகர் துனியா விஜய் இருந்துள்ளார். அப்போது, காவல் துறையினரை திசைதிருப்பும் நோக்கில் அவர்களுடன் பேச்சு கொடுத்து சம்பவ இடத்தில் இருந்த சுந்தரை தப்பிக்க விட்டார். இது தொடர்பாக துனியா விஜயிடம் விசாரித்தபோது சுந்தரை தான் பிடித்து கொடுப்பதாக போலீசிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால், பிடித்து கொடுக்காமல் துனியா விஜய்யும் தலைமறைவானார். இந்நிலையில் பெங்களூரு போலீசார் துனியா விஜய் மீது காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து  தேடி வந்தனர்.

சுமார் 5 நாட்களுக்கு மேல் தலைமறைவாக இருந்த துனியா விஜயை பெங்களூரு போலீசார் நேற்றிரவு கோவை அருகே வைத்து கைது செய்துள்ளனர்.


கோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா  விஜய் கைது,Kannada-actor-Duniya-Vijay-arrested-in-Tamil-Nadu.v கோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா  விஜய் கைது,Kannada-actor-Duniya-Vijay-arrested-in-Tamil-Nadu.v கோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா  விஜய் கைது,Kannada-actor-Duniya-Vijay-arrested-in-Tamil-Nadu.v
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மீண்டும் இணையும் ‘விக்ரம் வேதா’ ஜோடி
விக்ரம் வேதா’ படத்தில் ஜோடியாக நடித்த மாதவன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருவரும் மறுபடியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. விஜய் சேதுபதி -மாதவன்  முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த

மேலும்...

 டிராபிக் ராமசாமி திரைப்படம் விஜய் பிறந்தநாளன்று வெளியீடு
டிராபிக் ராமசாமி’ படம், விஜய் பிறந்த நாளில் வெளியாவது பெருமையாக இருக்கிறது படத்தின் டைரக்டர் கூறினார்.சமுதாயத்துக்கும், சட்டத்துக்கும் தீங்கு செய்தவர்களை திரைப்படம் மூலமாக சுட்டிக்காட்டி, ‘புரட்சி இயக்குனர்’ என்று பெயர் எடுத்தவர், எஸ்.ஏ.சந்திரசேகர். இவர், சமூக சேவகர் ‘டிராபிக் ராமசாமி’யாக ஒரு

மேலும்...

 ஆறுதல் கூறுவது எப்படி என விஜயிடம் இருந்து ரஜினி கற்க வேண்டும் : அமீர் விமர்சனம்
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி என்பதை விஜயிடம் இருந்து ரஜினிகாந்த் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இயக்குநர் அமீர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும்

மேலும்...

 காலா’ பட திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் - முதல் அமைச்சர் குமாரசாமி
கர்நாடகாவில் புதிய மந்திரிகள் பதவி ஏற்புக்கு பின், மந்திரிசபை கூட்டம் முதல்–மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘காலா’ படத்திற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால் அந்த படத்தை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in