tamilkurinji logo


 

கோஹ்லி,கார்த்திக் சதம் : இந்தியா அசத்தல் வெற்றி,sports news

sports,news




செய்திகள் >>> விளையாட்டு

கோஹ்லி,கார்த்திக் சதம் : இந்தியா அசத்தல் வெற்றி

First Published : Saturday , 1st June 2013 08:55:50 PM
Last Updated : Saturday , 1st June 2013 08:55:50 PM


கோஹ்லி,கார்த்திக் சதம் : இந்தியா அசத்தல் வெற்றி,sports news

சூதாட்ட சர்ச்சையை கடந்த இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபி தொடரை சிறப்பாக துவக்கியது. நேற்று நடந்த பயிற்சி போட்டியில் விராத் கோஹ்லி(144), தினேஷ் கார்த்திக்(106) சதம் அடிக்க, 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இலங்கை அணி பரிதாபமாக வீழ்ந்தது.

இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் (ஜூன் 6-23) நடக்க உள்ளது. முதல் போட்டியில் (வரும் 6ம் தேதி) இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது.

இதற்கு முன் நேற்று நடந்த பயிற்சி போட்டியில், இந்தியா, இலங்கை அணிகள் மோதின."டாஸ்' வென்ற இந்திய அணி, "பீல்டிங்' தேர்வு செய்தது.

இலங்கை அணிக்கு குசல் பெரேரா, தில்ஷன் ஜோடி அசத்தல் துவக்கம் கொடுத்தது. இஷாந்த் பந்துவீச்சில் இரண்டு சிக்சர் அடித்த பெரேரா, அரைசதம் கடந்தார். மறுமுனையில் அரைசதம் கடந்த தில்ஷன் தன்பங்கிற்கு அஷ்வின் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். பெரேரா(82), தில்ஷன் (84) "ரிட்டையர்டு ஹர்ட்' முறையில் வெளியேறினர். ஜெயவர்தனா (30) தாக்குப்பிடிக்கவில்லை.

பின் சங்ககரா(45), சண்டிமால் (46) கைகொடுக்க, இலங்கை அணி 50 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 333 ரன்கள் குவித்தது. திசாரா பெரேரா (26), தில்கரா (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

இமாலய இலக்கை விரட்டிய இந்திய அணி துவக்கத்தில் திணறியது. ஷிகர் தவான்(1) ரன் அவுட்டானார். முரளி விஜய்(18), ரோகித் சர்மா(5) தாக்குப்பிடிக்கவில்லை.

பின் விராத் கோஹ்லி, ரெய்னா சேர்ந்து பொறுப்பாக ஆடினர். ரெய்னா 34 ரன்களுக்கு வெளியேறினார்.

அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் "கம்பெனி' கொடுக்க, அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்தார் கோஹ்லி. அதிரடியாக ஆடிய இவர்கள், 5வது விக்கெட்டுக்கு 186 ரன்கள் சேர்த்தனர். ஜீவன் மெண்டிஸ் ஓவரில் கார்த்திக் வரிசையாக ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரி அடித்தார்.

மறுமுனையில் ஹெராத் பந்தை சிக்சருக்கு பறக்க விட்ட கோஹ்லி சதம் அடித்தார். சேனநாயகே ஓவரில் கோஹ்லி ஒரு சிக்சர், பவுண்டரி அடிக்க, ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. கோஹ்லி 144 ரன்களுக்கு(120 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்), எரங்கா பந்தில் அவுட்டானார்.

நேற்று 29வது பிறந்தநாள் கொண்டாடிய கார்த்திக்கும் சதம் கடந்தார். எரங்கா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய இவர், வெற்றியை உறுதி செய்தார்.

இந்திய அணி 49 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 337 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கார்த்திக் (106 ரன், 81 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் தோனி(18) அவுட்டாகாமல் இருந்தனர்.

கோஹ்லி,கார்த்திக் சதம் : இந்தியா அசத்தல் வெற்றி,sports news கோஹ்லி,கார்த்திக் சதம் : இந்தியா அசத்தல் வெற்றி,sports news கோஹ்லி,கார்த்திக் சதம் : இந்தியா அசத்தல் வெற்றி,sports news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து 9–வது வெற்றியை பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. 10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல்

மேலும்...

 IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் பங்கேற்றுள்ள

மேலும்...

 மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை ‌ஷரபோவா, கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர்

மேலும்...

 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து 6–வது வெற்றியை பெற்றது.  10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in