கோஹ்லி சதத்தால் 2வது டெஸ்ட் டிரா:-தொடரை வென்றது நியூசிலாந்து முச்சதம் விளாசி மெக்கல்லம் சாதனை

கோஹ்லி சதத்தால் 2வது டெஸ்ட் டிரா:-தொடரை வென்றது நியூசிலாந்து முச்சதம் விளாசி மெக்கல்லம் சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. பிரன்டன் மெக்கல்லத்தின் முச்சதத்தால் வெலிங்டன் டெஸ்டில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.

இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டன் பேசின் ரிசர்வ் மைதானத்தில் கடந்த 14–ந்தேதி தொடங்கியது.

முதல் இன்னிங்சில் முறையே நியூசிலாந்து 192 ரன்களும், இந்தியா 438 ரன்களும் எடுத்தன. 246 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 94 ரன்களுடன் தோல்வியின் விளிம்பில் தத்தளித்தது.

 இதன் பின்னர் கேப்டன் பிரன்டன் மெக்கல்லமும், விக்கெட் கீப்பர் வாட்லிங்கும் 6–வது விக்கெட்டுக்கு 352 ரன்கள் சேகரித்து உலக சாதனை படைத்ததுடன், தங்கள் அணியை வீழ்ச்சியின் பிடியில் இருந்தும் காப்பாற்றினர். 4–வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 571 ரன்கள் எடுத்திருந்தது. பிரன்டன் மெக்கல்லம் 281 ரன்களுடனும், அறிமுக வீரரும், ஆல்–ரவுண்டருமான ஜேம்ஸ் நீஷம் 67 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. அதிரடியாக ஆடிய புதுமுக வீரர் நீஷம் தனது முதலாவது சதத்தை பூர்த்தி செய்தார். அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்த 10–வது நியூசிலாந்து வீரர் என்ற சிறப்பையும் 23 வயதான நீஷம் தட்டிச் சென்றார்.

ஜாகீர்கான் வீசிய அடுத்த ஓவரில் பிரன்டன் மெக்கலம், ‘தேர்டுமேன்’ பகுதியில் பந்தை பவுண்டரிக்கு விரட்டி முச்சத்தை புசித்தார். 84 ஆண்டு கால நியூசிலாந்து கிரிக்கெட் சரித்திரத்தில் நியூசிலாந்து வீரர் ஒருவர் 300 ரன்களை தொடுவது இதுவே முதல் முறையாகும். சரியாக 46–வது நிமிடத்தில் மெக்கல்லம் அரங்கேற்றிய இந்த அரிய நிகழ்வை அவரது குடும்பத்தினர் நேரில் கண்டு மகிழ்ச்சியில் நெகிழ்ந்தனர்.

முச்சதம் அடித்த அதே ஓவரில் மெக்கல்லம், டோனியிடம் கேட்ச் ஆனார். 302 ரன்கள் (559 பந்து, 32 பவுண்டரி, 4 சிக்சர்) குவித்து பெவிலியன் திரும்பிய அவருக்கு இந்திய வீரர்கள் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

நியூசிலாந்து அணி 2–வது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 680 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. நீஷம் 137 ரன்களுடன் (154 பந்து, 20 பவுண்டரி) களத்தில் இருந்தார்.
பின்னர் 67 ஓவர்களில் 435 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இந்திய அணி 2–வது இன்னிங்சை விளையாடியது. 54 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை தாரைவார்த்த போதிலும், விராட் கோலியும், ரோகித் ஷர்மாவும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். நேர்த்தியாக ஆடிய கோலி தனது 6–வது சதத்தை எட்டினார்.

இந்திய அணி 52 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்திருந்த போது, இரு அணி கேப்டன்களும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர். கோலி 105 ரன்களுடன் (135 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
முன்னதாக முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்ததால் அந்த அணி தொடரை 1–0 என்ற கணக்கில் தனதாக்கியது. நியூசிலாந்து அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கிறது. மெக்கல்லம் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் (டெஸ்ட் 0–1, ஒரு நாள் போட்டி 0–2) ஒரு வெற்றி கூட பெறாத இந்திய அணி, அதைத் தொடர்ந்து நியூசிலாந்து தொடரிலும் (ஒரு நாள் போட்டி 0–4, டெஸ்ட் 0–1) வெற்றிக்கனி ஏதுமின்றி வெறுங்கையுடன் தாயகம் திரும்புகிறது.

ஸ்கோர்  போர்டு

முதல் இன்னிங்ஸ்

நியூசிலாந்து 192

இந்தியா 438

2–வது இன்னிங்ஸ்

நியூசிலாந்து

புல்டான் எல்.பி.டபிள்யூ

    (பி) ஜாகீர் 1

ரூதர்போர்டு (சி) டோனி

    (பி) ஜாகீர் 35

வில்லியம்சன் (சி) டோனி

    (பி) ஜாகீர் 7

லத்தம் (சி) டோனி (பி)ஷமி 29

பிரன்டன் மெக்கல்லம்     

    (சி)டோனி(பி) ஜாகீர் 302

ஆண்டர்சன் (சி) அண்ட்

    (பி) ஜடேஜா 2

வாட்லிங் எல்.பி.டபிள்யூ

    (பி) ஷமி 124

நீஷம் (நாட்–அவுட்)    137

சவுதி (சி) புஜாரா(பி)ஜாகீர்    11

வாக்னெர் (நாட்–அவுட்)    2

எக்ஸ்டிரா    30

மொத்தம் (210 ஓவர்களில்

     8 விக்கெட்டுக்கு டிக்ளேர்) 680

விக்கெட் வீழ்ச்சி: 1–1, 2–27, 3–52, 4–87, 5–94, 6–446, 7–625, 8–639

பந்து வீச்சு விவரம்

இஷாந்த் ஷர்மா    45–4–164–0

ஜாகீர்கான்    51–13–170–5

முகமது ஷமி    43–6–149–2

ஜடேஜா    52–11–115–1

ரோகித் ஷர்மா    11–0–40–0

கோலி    6–1–13–0

டோனி    1–0–5–0

தவான்    1–0–3–0

இந்தியா

விஜய்(சி)ஆண்டர்சன்(பி)சவுதி    7

தவான் எல்.பி.டபிள்யூ

    (பி) பவுல்ட் 2

புஜாரா(சி)வாட்லிங்(பி)சவுதி 17

விராட் கோலி (நாட்–அவுட்) 105

ரோகித்ஷர்மா(நாட்–அவுட்)    31

எக்ஸ்டிரா    4

மொத்தம் (52 ஓவர்களில்    3 விக்கெட்டுக்கு) 166

விக்கெட் வீழ்ச்சி:1–10,2–10,3–54

பந்து வீச்சு விவரம்

டிரென்ட் பவுல்ட்     16–5–47–1

டிம் சவுதி    16–3–50–2

வாக்னெர்    11–3–38–0

நீஷம்    5–0–25–0

ஆண்டர்சன்    4–1–6–0
https://goo.gl/QNveHF


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்