சச்சினை விட கோலி சிறந்த பேட்ஸ்மேன்-கபில்தேவ்

சச்சினை விட கோலி சிறந்த பேட்ஸ்மேன்-கபில்தேவ்

விளையாட்டு விருது விழாவில் கலந்துகொள்வதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கோலாலம்பூர் சென்றுள்ளார். அங்கு அவர் அளித்த பேட்டியில், சச்சினைவிட விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேனாக வருவார் என்று தெரிவித்தர்.

“பேட்டிங்கில் இந்திய இளம் வீரர் விராட் கோலியின் அசுர வளர்ச்சியை பார்க்கும் போது விரைவி்ல் அவர் அனைத்து வகையான உலக சாதனைகளையும் படைப்பார். முழு உடல் தகுதியுடன் அவரால் 32 அல்லது 34 வயது வரை விளையாட முடியும் என்று நினைக்கிறேன். அப்படி அவர் விளையாடினால் சச்சின் அல்லது விவியன் ரிச்சர்ட்ஸ் போன்று வர வாய்ப்புள்ளது.

கிரிக்கெட் உலகில் இன்னொரு பிராட்மேனோ சச்சின் டெண்டுல்கரோ இனி உருவாக முடியாது என்று நினைத்திருந்தேன். ஆனால் கோலியின் அபார ஆட்டத்தைக் காணும் போது சச்சினுக்கும் மேல் கோலி சிறந்த பேட்ஸ்மேனாக வர பிரகாசமான வாய்ப்புள்ளது. ஆனால், தோள்பட்டை காயம் மற்றும் உடல் தகுதி போன்ற பிரச்சனைகளில் சிக்காமல் கோலி தன்னை முழு உடல் தகுதியுடன் வைத்துக்கொள்ள வேண்டும்” என்று கபில் கூறினார்.

https://goo.gl/pCDmrn


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்