சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்
சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 25ம் தேதி 10 மணி நேரம் ஏழுமலையான் கோயில் நடை  மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி திருமலை தேவஸ்தானம் மற்றும் ஏராளமான கோயில்களில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் நடக்கும்போது கோயில் நடை சாத்தப்படுவது வழக்கம். அதன்படி வரும் 25ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு அன்று மாலை 5 மணிக்கு ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்பட்டு மறுநாள் அதிகாலை கோயில் மீண்டும் திறக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இம்மாதம் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை வருடாந்திர வசந்த உற்சவம் நடைபெறுகிறது. இதில் கடைசி நாளான 25ம் தேதி காலை 10 மணிக்குள் அனைத்து சேவைகளையும் முடிக்க உள்ளதாகவும் அன்று காலை மற்றும் இரவு நேரங்களில் விஜபி பிரேக் தரிசனம், 300 ரூபாய்க்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படும் எனவும், திவ்ய தரிசனம் மூலம் வரும் பக்கதர்களுக்கு 3 மணிக்கு மேல் பக்தர்களை அனுமதிக்காமல்,

மகா சுக்தி மற்றும் பூலங்கி சேவை செய்தபின்னர் மாலை 5 மணியளவில் கோயில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  சந்திர கிரணம் முடிந்த பின்னர் 26ம் தேதி அதிகாலை 3 மணியளவில் சுப்ரபாத சேவை மூலமாக பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான இணை தலைமை செயல் அலுவலர் சீனிவாசராஜு தெரிவித்துள்ளார்.

திருப்பதி கோயிலில் தினமும் அதிகாலையில் ஏழுமலையானின் துயிலை கலைப்பதற்காக சுப்ரபாத சேவை நடக்கிறது. இதற்கு குறிப்பிட்ட அளவு டிக்கெட்டுகளே வழங்கப்படுவதால் இதில் அதிகம் விஐபி.க்களே கலந்து கொள்கின்றனர். சுப்ரபாத சேவை முடிந்த பிறகு வேதபாராயணம் செய்த அர்ச்சகர்கள், மிராசுகள், விஐபி.க்களுக்கு ஆரத்தி வழங்கி வந்தனர். சுப்ரபாதம் நடக்கும்போது பக்தர்கள் மூலவருக்கு முன்னாள் நிற்பதுடன், சத்தம் போட்டு பேசி கொண்டிருப்பார்கள்.

இதை தடுக்க,  தேவஸ்தானம் அதிரடி முடிவு எடுத்துள்ளது. அதன்படி, சுப்ரபாத சேவை ஆரம்பித்தவுடன் பக்தர்கள் பேசாமல் நிற்க வேண்டும். மூலவருக்கு முன் உள்ள கருடாழ்வார் சிலை வரை யாரும் நிற்க கூடாது. சுப்ரபாதம் முடிந்த பிறகு அர்ச்சகர்கள் மற்றும் மிராசுகளுக்கு சர்க்கார் ஆரத்தி வழங்க வேண்டும். விஐபி.க்களுக்கு ஆரத்தி வழங்கக்கூடாது என முடிவு செய்யப்பட்டது.
https://goo.gl/GYxkBX






28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு