சபரிமலையில் நாளை மகரவிளக்கு பூஜை

சபரிமலையில் நாளை மகரவிளக்கு பூஜை
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜை நாளை நடைபெறுகிறது. மாலை 6.30க்கு பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சியளிக்கிறார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த மாதம் 26ம் தேதி மண்டல பூஜை நடந்தது. பிறகு மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை கடந்த மாதம் 30ம் தேதி திறக்கப்பட்டது. 31ம் தேதி முதல் நெய் அபிஷேகம் உட்பட சிறப்பு பூஜைகள் தொடங்கின. இவ்வருட மகரவிளக்கு பூஜை நாளை நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜைக்கு முன்னோடியாக நடைபெறும் பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.

மகர விளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கப்படுவது வழக்கம். திருவாப ரணம் நேற்று பகல் 1 மணியளவில் பந்தளம் சாஸ்தா கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. நாளை மாலை 3 மணியளவில் இந்த திருவாபரணம் பம்பையை வந்தடையும். பம்பையில் தேவசம்போர்டு சார்பில் வர வேற்பு அளிக்கப்படுகிறது. பிறகு சரம்குத்தி வழியாக சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்படும். சன்னிதானத்தில் திருவாபரணத்திற்கு தேவசம்போர்டு அமைச்சர் சிவக்குமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பிறகு, திருவாபரணத்தை தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் கோயிலுக்குள் கொண்டு சென்று ஐயப்பனுக்கு அணிவிப்பார்கள். மாலை 6.30 மணியளவில் தீபாராதனை நடத்தப்படும். இந்த நேரத்தில்தான் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரியும். இதை தரிசிப்பதற்காக பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக சபரிமலை வரும் பக்தர்கள், மகரஜோதி தெரியும் இடத்தில் குடில் கட்டி தங்கியுள்ளனர்.

மகரவிளக்கு பூஜைக்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் மகரஜோதி தினத்தன்று புல்மேட்டில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 102 பக்தர்கள் உயிரிழந்தனர். இந்த ஆண்டு நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சன்னி தானம், பம்பை, புல்மேடு ஆகிய இடங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
https://goo.gl/xo4Gak


28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு