சம்பள பாக்கி தரவில்லை; அதற்கு ஆதாரம் உள்ளது'-கமல் மீது கவுதமி புகார்

சம்பள பாக்கி தரவில்லை; அதற்கு ஆதாரம் உள்ளது'-கமல் மீது கவுதமி  புகார்

ஆடை வடிவமைப்பாளராக தான் பணியாற்றிய படங்களுக்கு நடிகர் கமல்ஹாசன் சம்பள பாக்கி தரவில்லை என புகார் கூறிய நடிகை கவுதமி, தற்போது, அதற்குரிய ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார்.

கமல்ஹாசன் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கி இன்னும் தரப்படவில்லை என நடிகை கவுதமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

அதில், ''கமல்ஹாசனுடன் தனிப்பட்ட முறையிலோ, தொழில்ரீதியாகவோ எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவரது ராஜ்கமல் நிறுவனத்துக்காகவும், கமல் நடித்த படங்களுக்கும் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி உள்ளேன். 'தசாவதாரம்', 'விஸ்வரூபம்' ஆகிய படங்களுக்கு எனக்கு தர வேண்டிய சம்பள பாக்கி நிலுவையில் உள்ளது. பலமுறை கேட்டுப் பார்த்தும் சம்பள பாக்கி தரவில்லை. கமல்ஹாசனிடம் ஏற்பட்ட மாற்றங்களும், சுயமரியாதையை இழக்கக்கூடாது என நான் முடிவெடுத்ததும் தான் நாங்கள் பிரியக் காரணம்'' எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் கமல்ஹாசன் தர வேண்டிய சம்பள பாக்கிக்கான ஆதாரத்தை தனது பிளாக்கில் நடிகை கவுதமி வெளியிட்டுள்ளார்.

கமல்ஹாசனுடன் இணைந்து செயல்படுவதாக என்னைப் பற்றி செய்திகள் வெளிவந்த வண்ணம் இருப்பதால் இதுபற்றி விளக்க வேண்டிய சூழலில உள்ளன். அவருடன் தனிப்பட்ட முறையிலோ, தொழில்ரீதியாகவோ எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இதனை மீண்டும் மீண்டும் கூறி வருகிறேன். யாரிடம் இருந்தும் எதையும் நான் எதிர்பார்க்கவில்லை. அதே சமயம் நான் உழைத்த படங்களுக்கான ஊதியத்தை எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால் இந்த விவரங்கள் தெரியாமல் என்னைப் பற்றி தவறான அர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்றன.

இதனால் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகியுள்ளேன். என்னுடைய சொந்த முயற்சியில் எனக்காகவும், எனது மகளுக்காகவும் உழைத்து வருகிறேன். தாயாக எனது மகளுக்காக, அவளது எதிர்காலத்திற்காக போராடுவது ஒன்று மட்டும்தான் தற்போது என் முன் உள்ள சவால்கள். வாழ்க்கையில் மோசமான தருணங்கள் ஏற்படுவது சகஜம்தான். அதில் இருந்து மீண்டு ஒளிமயமான வாழ்வை நோக்கி நகர்வதுதான் எங்களது தற்போதைய தேவை.

மற்றவர்களுடன் இணைந்து சகஜமான, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதை எப்போதும் விருப்பமாக கொண்டுள்ளேன். கடந்த 20 ஆண்டுகளாக எனது பயணம் இவ்வாறுதான் இருந்துள்ளது. எனது பணிகள், கருத்துகள், சிந்தனைகளில் இருந்து உத்வேகம் பெற்று எனது பயணத்தைத் தொடர்கிறேன்.

அதே சமயம் எனக்கான ஆதரவுக் குரல்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது அன்பு வைத்து ஆதரவு தெரிவித்து வருபவர்களுக்கு எனது அன்பையும் நன்றியையும் பரிமாறிக் கொள்கிறேன். காரணம் இல்லாமல் நான் எந்த கருத்தையும் சொல்ல மாட்டேன். அதுபோலவே ஆதாரம் இல்லாமலும் பேச மாட்டேன்'' என கவுதமி கூறியுள்ளார்.

https://goo.gl/7mmjTA


18 Dec 2018

மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்

18 Dec 2018

மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்

13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்

11 Dec 2018

ரஜினிகாந்துடன் நடித்தது பெருமை” - நடிகை திரிஷா மகிழ்ச்சி

11 Dec 2018

புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது: கமல்ஹாசன்

10 Dec 2018

சாதி வெறியர்களின் முகத்தில் கரியைப் பூசிய கவுசல்யாவுக்கு வாழ்த்துகள்: நடிகர் சத்யராஜ்

01 Nov 2018

2.0 - ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்

01 Nov 2018

மலையாள இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார்

31 Oct 2018

செருப்பால் தாக்கி சண்டையிட்ட பிரபல நடிகரின் 2 மனைவிகள்