சவுதி அரேபியாவில் தீ விபத்து:ஒரு தமிழர் உட்பட 10 இந்தியர்கள் பலி

சவுதி  அரேபியாவில்   தீ விபத்து:ஒரு தமிழர் உட்பட 10  இந்தியர்கள் பலி
வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உட்பட 11 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளை ேசரந்தவர்கள் லட்சக் கணக்கில் சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக கட்டுமானத் தொழில், மின்னியல், போன்ற பல்வேறு உடல் உழைப்பு சார்ந்த பணிகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 இவர்கள் பெரும்பாலும் பணியமர்த்தும் நிறுவனம் கொடுக்கும் குடியிருப்பு, வீடுகளில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.  பைசாலியா மாவட்டத்தில் நஜ்ரன் நகரில் கோல்டு மார்க்கெட் பகுதியில் இதுபோன்று தொழிலாளர்கள் தங்கியிருந்த ஒரு மிக பழைய வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் நடைபெற்ற இந்த விபத்தில் இந்தியர்கள் உட்பட 11 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

 இது குறித்து நஜ்ரன் மாகாண அதிகாரி ஒருவர் கூறியதாவது :  கடுமையாக போராடி தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஜன்னல் கூட இல்லாத அந்த வீட்டுக்குள் இருந்த 11 பேர் புகையால் மூச்சு திணறி உயிரிழந்தனர். இதில் இந்தியர்களும் உள்ளனர்.

 ஆறு பேருக்கு தீ காயம் ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.  தீவிபத்து குறித்து விசாரணை நடத்த மாகாண ஆளுநர் இளவரசர் ஜூலுவி பின் அப்துல் அசீஸ் உத்தரவிட்டுள்ளார். விசாரணை அவரது அலுவலக கண்காணிப்பின் கீழ் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://goo.gl/beM6c6


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே