சவுதி மன்னரின் ஆடம்பர விடுமுறை கொண்டாட்டத்தின் செலவு ரூ 650 கோடி

சவுதி மன்னரின் ஆடம்பர விடுமுறை கொண்டாட்டத்தின் செலவு ரூ 650 கோடி
சவுதி மன்னர் சல்மான் கோடை கால விடுமுறையை தமக்கு மிகவும் பிடித்த மொராக்கோ நாட்டில் உள்ள டேன்ஜியர் பகுதியில் மிகவும் ஆடம்பரமாக கழித்துள்ளார்.

மொராக்கோ நாட்டில் ஒரு மாத காலம் விடுமுறையை கழிக்க சவுதி மன்னர் சுமார் ரூ 650 கோடி (100 மில்லியன் டாலர்) செலவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருடன் அரச குடும்பத்தினர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த விடுமுறையில் பயணித்துள்ளனர்.

டேன்ஜியர்  பகுதியில் அமைந்துள்ள 74 ஏக்கர் பரப்பளவு கொண்ட தமக்கு சொந்தமான அரண்மனையில் மன்னர் சல்மான் தங்கியுள்ளார். ஒரு மாத காலம் தங்கிய மன்னரின் பணிவிடைக்காக 200 கார்கள் எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருந்ததாகவும், அதில் பெரும்பாலானவை எப்போதும் பயன்பாட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மன்னரின் வருகையை முன்னிட்டு கடந்த ஓராண்டு காலம் இந்த அரண்மனை விரிவாக புதுப்பிக்கப்பட்டது. மொராக்கோ வந்திறங்கிய மன்னரை அந்நாட்டு பிரதமர் சாதேடியன் ஒத்மணி விமான நிலையம் வந்து வரவேற்றுள்ளார்.

புதுப்பிட்டப்பட்ட புது அரண்மனையில் புதிதாக ஹெலிகொப்டர் தரை இறங்கும் வகையில் புதிய தளம் ஒன்றையும், புதிதாக சில குடியிருப்புகளையும் கட்டி முடித்துள்ளனர்.

அது மட்டுமின்றி பாதுகாப்புக்காக மொராக்கோ அரசின் 30 பேர் கொண்ட சிறப்பு படையும் வழங்கப்பட்டிருந்தது.

மன்னரின் இந்த திடீர் விடுமுறை கொண்டாட்டமானது சர்ச்சையை எழுப்பியிருந்தாலும் அது அந்த நாட்டு ஊடகங்களில் வெளியாவதில்லை.

சவுதி அரேபியாவில் தனி நபர் ஒருவருக்கு சராசரி ஆண்டு ஊதியமானது 33,000 டாலர் என்ற நிலையில் மன்னரின் ஒரு மாத கால விடுமுறைக்கு 100 மில்லியன் டாலர் செலவு செய்திருப்பது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனாலும் மன்னரின் இந்த வருகையானது மொராக்கோ நாட்டின் சுற்றுலா தொடர்பான வருவாயில் 1.5 சதவீதம் அதிக லாபம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
https://goo.gl/Z23iqT


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே