சஹாரா தெடரை கைப்பற்றியது இந்தியா!!

சஹாரா தெடரை கைப்பற்றியது இந்தியா!!
இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2–0 எனக் கைப்பற்றி, கோப்பை வென்றது.

வங்கதேசம் சென்ற இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 2–0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றி, முன்னிலை வகித்தது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி மிர்புரில் நேற்று நடந்தது.

இந்திய அணியில் அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு வினய் குமார், மனோஜ் திவாரி சேர்க்கப்பட்டனர். வங்கதேச அணியில் ஜியாவுர் ரஹ்மானுக்கு பதிலாக சோஹக் காஜி இடம் பிடித்தார். ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரெய்னா, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

இப்போட்டியில் மழையின் பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்திய அணி 8.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 13 ரன்கள் எடுத்த போது முதலில் மழை வந்தது. பின், 12.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்த போது மீண்டும் மழை பெய்தது.

மழை நின்றபின் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் போட்டி நடந்தது. இந்திய அணி 34.2 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்திருந்த போது மூன்றாவது முறையாக மழை குறுக்கிட,  ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து மழை நீடித்ததால், போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து இரு அணிகளின் கேப்டன்கள் சம்மதத்துடன் இப்போட்டி ரத்து செய்யப்பட்டதாக அம்பயர்கள் தெரிவித்தனர்.

இதன்மூலம் இந்திய அணி 2–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி, கோப்பை வென்றது.
https://goo.gl/Vc99id






15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்