சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் வெற்றி

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் வெற்றி
10 அணிகள் இடையிலான 6-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் பெங்களூரில் நேற்று இரவு நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் (பிரிவு ஏ) சென்னை சூப்பர் கிங்ஸ்-டால்பின்ஸ் (தென் ஆப்பிரிக்கா) அணிகள் மோதின.

‘டாஸ்’ ஜெயித்த டால்பின்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. வெய்ன் சுமித் 7 ரன்னில் ஆட்டம் இழந்தாலும், 2-வது விக்கெட் இணையான பிரன்டன் மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா ஆகியோர் அதிரடி காட்டினார்கள். சுரேஷ்ரெய்னா தொடக்கம் முதலே விளாசி தள்ளினார். அவரை கட்டுப்படுத்த முடியாமல் டால்பின்ஸ் வீரர்கள் தடுமாறினார்கள். 4 ஓவர்களில் 50 ரன்னை எட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8.4 ஓவர்களில் 100 ரன்னை தாண்டியது. பிரன்டன் மெக்கல்லம் 29 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 49 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

நிலைத்து நின்று ரசிகர்களுக்கு விருந்து படைத்த சுரேஷ் ரெய்னா சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் பிரைலிங் பந்து வீச்சில் அவுட் ஆனார். சுரேஷ்ரெய்னா 43 பந்துகளில் 4 பவுண்டரி, 8 சிக்சருடன் 90 ரன்கள் குவித்தார். கேப்டன் டோனி டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். டுபிளிஸ்சிஸ் 30 ரன்னும், வெய்ன் பிராவோ 11 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் குவித்தது. ரவீந்திர ஜடேஜா 40 ரன்னுடனும் (15 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன்) அஸ்வின் 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

பின்னர் 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய டால்பின்ஸ் அணியும் ஆரம்பத்தில் அதிரடி காட்டியது. 2.3 ஓவர்களில் 50 ரன்னை எட்டிய அந்த அணி 8.5 ஓவர்களில் 100 ரன்னை கடந்தது.

அதன் பின்னர் விக்கெட்டுகள் வீழ்ந்ததால் அந்த அணியின் அதிரடியில் தொய்வு ஏற்பட்டது. 20 ஓவர்களில் டால்பின்ஸ் அணி 188 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். டால்பின்ஸ் அணி தொடர்ந்து சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.
https://goo.gl/TYbRj5


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்