சாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பி எடுத்த வாலிபர்

சாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பி எடுத்த வாலிபர்
ராஜஸ்தான் மாநிலம், பார்மேர் மாவட்டம் சோடான் எனும் இடத்தில் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க 3 பேர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த பள்ளி பேருந்து மோதி இன்று விபத்துக்குள்ளானது.

இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று பேரும் சாலையோரம் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போரடினர்.

விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகே இருந்த சிலர், விபத்தில் சிக்கிய 3 பேரையும் காப்பற்ற முயற்சி செய்யாமல் தங்களது செல்போன்களை எடுத்து  உயிருக்கு போரடியவர்களுடன் செல்பி மற்றும் வீடியோ எடுத்து சமூக வளைதளங்களில் வெளியிட்டுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சாலையோரம் கிடந்தவர்களுடன் ஒருவர் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ விபத்தில் சிக்கிய 3 பேரும் கிட்டத்தட்ட அரை மணி நேரமாக சாலையோரம் உயிருக்கு போராடியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு யாரும் உதவ முன்வராததால் அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்ட உடன் அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் ஒருவேலை அவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்’ என தெரிவித்தார்.

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களுக்கு உதவி செய்யாமல் அருகே இருந்தவர்கள் செல்பி எடுத்த சம்பவம் மக்களிடையே மனிதநேயம் மரித்துக்கொண்டு வருவதற்கான மேலும் ஒரு உதாரணமாக பார்க்கப்படுகிறது.


19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்

06 Feb 2019

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உயர் நீதிமன்றம் உத்தரவு

02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை