சிகிச்சை பலனின்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் உயிரிழந்தார்

சிகிச்சை பலனின்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் உயிரிழந்தார்
அதிவேக பவுன்சர் தாக்கியதில் தலையில் படுகாயமடைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை சிட்னி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பிலிப் ஹியூஸ் தனது 25-வது வயதில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
எதிர்பாராதவிதமாக தலையில் பந்து தாக்கியதில் சுயநினைவினை இழந்த ஹியூக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆஸ்திரேலியாவில் முதல் தர கிரிக்கெட் போட்டியானது, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் விளையாடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, பவுன்சராக வந்த பந்து எதிர்பாராத விதமாக தலையில் பலமாக தாக்கியது.  

இதனையடுத்து அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக சிட்னியில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஹியூக்ஸின் நிலைகவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவசர அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது,


இதுகுறித்த தகவல்கள்  48 மணி நேரத்திற்குள் தெரியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 63 ரன்கள் எடுத்திருந்த போது, ஷேன் அபாட்டின் வீசிய பந்தானது ஹெல்மெட் அணிந்திருந்த ஹியூக்ஸின் இடது தலையில் பட்டு தாக்கியவுடனேயே ரத்தம் கொட்ட ஆரம்பித்து விட்டது.

பதறிப்போன மற்ற வீரர்களும், மருத்துவ உதவியாளர்களும் முதலுதவி அளித்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சக போட்டியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப் ஹியூக்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளிலும், 25 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://goo.gl/SN5Rj7


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்