சினிமா பாணியில் பிறந்தநாள் விழா கொண்டாடிய 67-க்கும் மேற்பட்ட ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது

சினிமா பாணியில் பிறந்தநாள் விழா கொண்டாடிய 67-க்கும் மேற்பட்ட ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது
சென்னையின் பிரபல தாதா தனது பிறந்த நாளை பூந்தமல்லியில் கோலாகலமாக கொண்டாட அதில் கலந்துகொண்ட ரவுடிகளை சினிமா பாணியில் போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் நேற்று மாலை ரவுடிகள் கண்காணிப்பு பிரிவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே தாம்பரத்தில் இருந்து அதிவேகத்தில் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் தேடப்படும் குற்றவாளியான மதன் (எ) பல்லு மதன் என தெரிய வந்தது. அவரிடம் பயங்கர ஆயுதங்களும் இருந்தன.

.
மதனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பூந்தமல்லி அருகே மலையம்பாக்கம் என்ற இடத்தில் பண்ணை வீட்டில் நடக்கும் தங்களின் நண்பர் பினுவின் பிறந்த நாள் விழாவுக்குச் செல்வதாகக் கூறியுள்ளனர். சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பினு பிரபல தாதா ஆவார்.

சென்னையின் முக்கிய விஐபியின் பலத்தில் போலீஸார் நெருங்க முடியாத அளவுக்கு சக்தி வாய்ந்தவராக இருந்தவர். பல குற்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட பினுவின் கீழ் பெரிய ரவுடிகள் பட்டாளமே உள்ளது. ஏற்கெனவே தேடப்படும் குற்றவாளியாக பினு அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து ரவுடிகள் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் பிடிபட்ட பல்லு மதனை காவல் ஆய்வாளர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர். தாதா பினு நடத்தும் பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் நூற்றுக்கணக்கான ரவுடிகள் அங்கு ஒன்று கூடுவதையும் அம்பத்தூர் துணை ஆணையாளர் சர்வேஸ்ராஜூக்கு ரகசியமாக தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சர்வேஸ்ராஜ் மேலதிகாரி இணை ஆணையர் சந்தோஷ்குமாருக்கு அளித்த தகவலை அடுத்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கவனத்துக்கு ரவுடிகள் ஒன்று கூடும் திட்டம் கொண்டு செல்லப்பட்டது.

ஆணையர் உத்தரவுப்படி ரகசிய திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. மாங்காடு, குன்றத்தூர், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, போரூர் மற்றும் எஸ்ஆர்எம்சி காவல் நிலையங்களில் உள்ள காவலர்களை உஷார்படுத்தப்பட்டு 60-க்கும் மேற்பட்ட போலீஸார் வாடகை வாகனங்களில் மலையம்பாக்கம் பகுதியைச் சுற்றி வளைத்தனர்.

ஒரே இடத்தில் 120-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கூடியிருந்ததைக் கண்ட காவலர்கள், பண்ணை வீட்டில் அதிரடியாக நுழைந்தனர். இதனை கண்ட 50-க்கும் மேற்பட்ட ரவுடிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். தப்பி ஓட முயன்ற 72 ரவுடிகளை போலீஸார் துப்பாக்கி முனையில் பிடித்தனர். பிடிபட்ட ரவுடிகளிடம் இருந்து வீச்சரிவாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ரவுடிகள் பயன்படுத்திய அங்கிருந்த 8 கார்கள், 38 இருசக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய ரவுடிகளை தேடும் பணியில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிக்கிய ரவுடிகளிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

.
சிக்கிய பலரும் சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் ஆவர்.72 ரவுடிகள் கைதான சம்பவத்தில் 10 பேர் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என துணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட ரவுடிகளில் மாதவரத்தைச் சேர்ந்த போலி வழக்கறிஞர் சரவணனும் ஒருவர்.

கல்லூரி மாணவர்கள் உள்பட 72 பேரை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துணை ஆணையர் சர்வேஷ் ராஜ் கூறியுள்ளார். 72-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள், மற்றும் ரவுடிகள் ஒரே நேரத்தில் சிக்கியிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜிகர்தண்டா படம் பாணியில் அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடிய தாதா

போலீஸார் சுற்றி வளைத்ததில் முக்கிய குற்றவாளியான தாதா பினு உள்ளிட்ட கூட்டாளிகள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் போலீஸார் ரவுடிகளை கைது செய்து அவர்கள் செல்போனை ஆய்வு செய்ததில் தாதா பினுவின் பிறந்த நாள் கொண்டாட்டப் படம் சிக்கியது. அதில் தாதா பினு அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடுவதும், உடன் முக்கிய ரவுடிகள் இருப்பதும் பதிவாகியுள்ளது.

ரவுடிகள் சிக்கியது எப்படி என இணை ஆணையர் சந்தோஷ்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''எல்லா ரவுடிகளும் ஒன்றுகூடி பிறந்த நாள் கொண்டாட உள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ரகசியத் திட்டம் தீட்டி சுற்றிவளைக்க திட்டமிட்டோம். கொஞ்சம் கூட தகவல் கசிந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். மலையம்பாக்கம் மக்கள் போலீஸாருக்கு பெரிதும் உதவினர்.

உதவி ஆணையர் தலைமையில் 10 காவல் ஆய்வாளர்கள், 15 உதவி ஆய்வாளர்கள், 40-க்கும் மேற்பட்ட காவலர்கள் சென்றனர். துப்பாக்கி முனையில் 75 ரவுடிகளையும் சுற்றி வளைத்தோம். போலீஸ் வாகனத்தில் சென்றால் ரவுடிகள் உஷாராகி ஓடிவிடுவார்கள் என்பதால் தனியார் வாகனத்தில் சென்றோம்.'' இவ்வாறு இணை ஆணையர் சந்தோஷ்குமார் தெரிவித்தார்.
https://goo.gl/qwKYYL


19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி