சிறுமிகள் புகைப்படம் எடுத்து பாலியல பலாத்காரம் செய்த பிரபல புகைப்பட கலைஞர் மர்ம மரணம்

சிறுமிகள் புகைப்படம் எடுத்து பாலியல பலாத்காரம் செய்த   பிரபல புகைப்பட கலைஞர் மர்ம மரணம்
இங்கிலாந்தின்  புகழ் பெற்ற புகைப்படக் கலைஞரும் திரைப்பட இயக்குநருமான டேவிட் ஹாமில்டன் இறந்த நிலையில் விடுதி ஒன்றில் இருந்து உடலை கண்டெடுத்துள்ளதாக போலீசார் தகவல் வெளியிட்டு உள்ளனர்.

ஹாமில்டன், சிறுமிகளின் நிர்வாண புகைப்படங்களை எடுத்து பிரசுரிப்பதால் பிரபலமடைந்தவர்.


சமீபத்தில் முன்னாள் சிறுமி மாடல் ஒருவர்  ஹாமில்டன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியதாக குற்றம்ச்சாட்டினார்.



சிறுமிகளின் நிர்வாணப் புகைப்படங்கள் அடங்கிய ஹாமில்டனின் சிறப்பு தொகுப்புகள் வெளியான சில வாரங்களிலேயே லட்சக்கணக்கில் விற்பனையானது.

மட்டுமின்றி இவரது படைப்புகள் அனைத்தும் கலை தொடர்பானது அல்ல எனவும் அவை அப்பட்டமான ஆபாசங்களின் தொகுப்பு எனவும் விமர்சனங்கள் எழுந்ததுண்டு.

பிரான்சின் வானொலி தொகுப்பாளர் ஒருவர் தனது 13 வயதில் ஹாமில்டனால் பாலியல் துன்புறுத்தலுக்கு இரையானதாக புகார் கூறி இருந்தார்.


மற்றொரு வானொலி தொகுப்பாளரும் தொலைக்காட்சி பிரபலவுமான பிளவி பிளாமெண்ட் தமது சுயசரிதை புத்தகத்தில் பிரபல புகைப்படக்கலைஞர் ஒருவரால் தாம் பலாத்காரம் செய்யப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

பிளாமெண்ட் தனது மாடலாக இருந்ததை ஒப்புக்கொண்ட ஹாமில்டன், பலாத்கார குற்றச்சாட்டை மறுத்தார்.


83 வயதாகும் ஹாமில்டன் பாரிசில் இருக்கும் தமது வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகவும், இல்லை அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனவும் இருவேறு கருத்துகள் வெளியாகியுள்ளன.


 உடற்கூறு பரிசோதனைக்கு பின்னரே உறுதியான தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

https://goo.gl/xH7RNi






03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே