tamilkurinji logo


 

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அதிரடி உத்தரவு,Idol theft cases will be transferred to CBI, TN govt informs Madras HC .

Idol,theft,cases,will,be,transferred,to,CBI,,TN,govt,informs,Madras,HC,.




செய்திகள் >>> தமிழகம்

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அதிரடி உத்தரவு

First Published : Thursday , 2nd August 2018 02:07:29 PM
Last Updated : Thursday , 2nd August 2018 02:07:29 PM


சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அதிரடி உத்தரவு,Idol theft cases will be transferred to CBI, TN govt informs Madras HC .


சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ அமைப்பே விசாரிக்கும் என்று தமிழக அரசு பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அரசாணை பிறப்பித்திருந்தது.

2016ம் ஆண்டுதான் சிலைக் கடத்தல் விவகாரம் மிகப் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. அன்று முதல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேல் விசாரித்து வந்தார்.
சிலை கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. பழனியில் கோயிலில் மாற்றப்பட்ட சிலை தொடங்கி தமிழகம் முழுக்க முறைகேடாக திருடப்பட்ட சிலை வழக்கில் விசாரணை நடக்கிறது.

ஆனால் தமிழகத்தில் இப்போதும் சிலை கடத்தல் தொடர்ந்து நடக்கிறது. இதில் தமிழக அரசின் நடவடிக்கையை சென்னை ஹைகோர்ட் கண்டித்து இருந்தது. மேலும் தமிழக அரசு சிலை கடத்தலை தடுக்கவில்லை என்றால் வழக்கை சிபிஐக்கு வழக்கை மாற்ற நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் நேற்று சென்னை ஹைகோர்ட்டில், தமிழகத்தில் நடக்கும் சிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.

மேலும் பொன் மாணிக்கவேல் தலைமையிலான விசாரணையில் திருப்தியில்லை என்றும் அவர் தலைமையிலான குழு இதுவரை விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்றும் தமிழக அரசே சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியிருந்தது.


இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தது. மேலும் நேர்மையான அதிகாரி பொன் மாணிக்கவேலிடம் இருந்து வழக்கை பறித்து சிபிஐ வசம் ஒப்படைப்பதில் உள்நோக்கம் உள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

எனினும் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் என்று தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அதிரடி உத்தரவு,Idol theft cases will be transferred to CBI, TN govt informs Madras HC . சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அதிரடி உத்தரவு,Idol theft cases will be transferred to CBI, TN govt informs Madras HC . சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அதிரடி உத்தரவு,Idol theft cases will be transferred to CBI, TN govt informs Madras HC .
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்
தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித

மேலும்...

 ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனபெட்டியின் மீது வாசகம் எழுதப்பட்டுள்ளது.5 முறை தமிழக முதல் அமைச்சராகவும் 50 ஆண்டு காலம் திமுக தலைவருமாக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி நேற்று (ஆகஸ்ட் 7) காலமானார். இந்திய

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி,

மேலும்...

 முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி சென்னையில் காலமானார். 95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 25ம் தேதி உடல்நிலை சரியில்லாமல்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in