சீனாவில் மழலையர் பள்ளியில் பயங்கர குண்டு வெடிப்பு 7 பேர் பலி 59 பேர் படுகாயம்

சீனாவில் மழலையர் பள்ளியில் பயங்கர குண்டு வெடிப்பு 7 பேர் பலி 59 பேர் படுகாயம்
சீனாவில் மழலையர் பள்ளியில் பயங்கர சத்தத்துடன் கூடிய குண்டு வெடித்ததில் 7 பேர் பலியாகினர். 59 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிழக்கு சீனா ஜியாங்சு மாகாணத்தில் ஒரு மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. மாலை பள்ளி முடிந்ததும் பள்ளி குழந்தைகள் வெளியே ஓடி வந்தனர். அப்போது மாலை 4.50 மணியளவில் பள்ளியின் நுழைவு வாயிலில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதில் 7 பேர் பலியாகி உள்ளதாகவும், 59 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளது. மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக சீனா போலீசார் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த பள்ளியை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மழலையர் பள்ளியில் குண்டு வெடித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
https://goo.gl/5QpYA7






03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே