சீன சுரங்கப்பாதையில் பள்ளி பேருந்து தீப்பிடித்து 11 குழந்தைகள் உயிரிழப்பு

சீன சுரங்கப்பாதையில் பள்ளி பேருந்து தீப்பிடித்து 11 குழந்தைகள் உயிரிழப்பு
சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷாண்டாங் மாகாணத்தின் வெய்ஹாய் நகரில் உள்ள சர்வதேச மழலையர் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் இன்று புறப்பட்டு சென்றது.


இந்த பஸ், சுரங்கப்பாதைக்குள் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அத்துடன் பஸ் தீப்பிடித்து எரிந்தது.

இந்த கோர விபத்தில் 5 தென்கொரிய குழந்தைகள், 6 சீனக் குழந்தைகள் என 11 மாணவர்களும், பஸ் டிரைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உள்ளூர் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


விபத்து நடந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டன. அதில், சுரங்கப் பாதையின் நுழைவு வாயிலில் இருந்து கரும்புகை வெளியேறுவது தெளிவாகத் தெரிந்தது.

ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


ஆனாலும், விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, சீனாவில் 2013ம் ஆண்டு 2.5 லட்சம் மக்கள் சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.
https://goo.gl/c34bdp


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே