சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விவகாரத்தில் அரசு தலையிடாது

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விவகாரத்தில் அரசு தலையிடாது

இந்திய வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், லோகுர் ஆகிய நால்வரும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது, உச்சநீதிமன்ற வளாகத்தில் கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவதாகவும், இதே நிலை நீடித்தால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தெரிவித்தும், சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், அனைத்து முடிவுகளையும் தலைமை நீதிபதியே தனிப்பட்ட முறையில் எடுத்து வருகிறார். மற்ற நீதிபதிகளுக்கு அவர் வாய்ப்பு அளிக்க வேண்டும். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நீக்குவது பற்றி தேசம் சிந்திக்க வேண்டும் என்று நால்வரும் கூட்டாக பேட்டியளித்தனர்.

நாட்டையே பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சட்ட மந்திரி ரவிஷங்கர் பிரசாத்துடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இது உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், நீதிபதிகள் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சட்ட அமைச்சக இணை மந்திரி சவுத்ரி கூறியதாவது, “ நமது நீதித்துறை உலகெங்கும் புகழ் பெற்றது, அது சுதந்திரமாக இருக்கிறது,

மேலும், இந்த பிரச்சனை அதுவாகவே தீர்ந்துவிடும்” என தெரிவித்தார். இது நீதித்துறையின் உள்விவகாரம் என்று தெரிவித்த அவர், இதில் மத்திய அரசி தலையிடாது என தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி விட்டதாக கூறியுள்ளார்.
https://goo.gl/mLFLxh


18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை

10 Dec 2018

நாடு முழுவதும் செங்கல் மூலம் கட்டிடம் கட்டத் தடை: மத்திய அரசு திட்டம்

16 Oct 2018

நாளை நடைதிறப்பு - சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு

11 Oct 2018

மசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு

10 Oct 2018

சிறுமி பலாத்காரம் “என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்