tamilkurinji logo
 

சுவையான சிக்கன் சாப்ஸ்,chicken masala recipechicken gravynon veg recipes

chicken,masala,recipechicken,gravynon,veg,recipes




சுவையான சிக்கன் சாப்ஸ்

First Published : Tuesday , 14th October 2014 01:06:44 AM
Last Updated : Tuesday , 21st July 2015 10:19:42 PM


சுவையான  சிக்கன்  சாப்ஸ்,chicken masala recipechicken gravynon veg recipes

தேவையான பொருட்கள்:

சிக்கன் –  அரை கிலோ

பெரிய வெங்காயம் – 2

தக்காளி – 2

பச்சை மிளகாய் – 3

கறிவேப்பிலை - சிறிதளவு

இஞ்சி, பூண்டு விழுது –    2 ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

வறுத்துப் பொடிக்க:

சோம்பு    – 1 ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

மல்லி விதை – 1 ஸ்பூன்

மிளகு – 1/2 ஸ்பூன்

வரமிளகாய் – 5 – 6

வெந்தயம்    – 1/2 ஸ்பூன்

வதக்கி அரைக்க:

தேங்காய் – 3 ஸ்பூன்

சோம்பு – 1/2 ஸ்பூன்

தாளிக்க:

பட்டை    – 2 துண்டு

சோம்பு – 1/2 ஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை :

சிக்கனுடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பொடிக்க வேண்டியவற்றை வெறும் கடாயில் சிவக்க வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். அரை  ஸ்பூன்  எண்ணெயில் தேங்காயையும், சோம்பையும் லேசாக வதக்கி அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கிக் கொள்ளவும். அதனுடன் ஊறவைத்த சிக்கனைச் சேர்த்து மூடி போட்டு 10 நிமிடங்கள் வதங்கவிடவும்.

சிக்கன் நன்கு வதங்கியதும் தேங்காய் விழுது, மிளகாய் தூள் சேர்த்து கிளறி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். சிக்கன் நன்கு வெந்ததும், உப்பு சரிபார்த்து பொடித்த பொடி தூவி இறக்கவும்.

சுவையான  சிக்கன்  சாப்ஸ்,chicken masala recipechicken gravynon veg recipes சுவையான  சிக்கன்  சாப்ஸ்,chicken masala recipechicken gravynon veg recipes சுவையான  சிக்கன்  சாப்ஸ்,chicken masala recipechicken gravynon veg recipes
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy
 தேவையான பொருட்கள்:சிக்கன் - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 20இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2  ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மல்லித் தூள் -  2 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்தயிர் - 1 ஸ்பூன்பால் -

மேலும்...

 சுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu
தேவையான பொருட்கள்:சிக்கன் – அரை  கிலோசின்ன வெங்காயம் – 20 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2  ஸ்பூன்தக்காளி –2 மிளகாய் தூள் – 1 ஸ்பூன்மஞ்சள் தூள் –  கால் ஸ்பூன்உப்பு – தேவையான அளவுநல்லெண்ணெய் – 4 ஸ்பூன்அரைக்க

மேலும்...

 டிராகன் சிக்கன் | Dragon chicken
தேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு தேவையான பொருள்கள் .எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோஇஞ்சி - பூண்டு  பேஸ்ட்  - 2  ஸ்பூன்மிளகாய் தூள்  - 2 ஸ்பூன்கார்ன் ப்ளார் மாவு - 2  ஸ்பூன்மிளகுத் தூள் - 1  ஸ்பூன்

மேலும்...

 கார சாரமான சிக்கன் வறுவல்.chicken pepper fry
தேவையான பொருள்கள்.சிக்கன் - அரை  கிலோ மிளகு - 1 ஸ்பூன்மிளகுத் தூள் - 3  ஸ்பூன் பச்சை மிளகாய் - 3 காய்ந்த மிளகாய் - 2 நறுக்கிய வெங்காயம் - 1அரைத்த வெங்காயம் - 1 இஞ்சி பூண்டு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in