சென்னையில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்தார் ரஜினிகாந்த்

சென்னையில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்தார் ரஜினிகாந்த்
புதிய நீதி கட்சி தலைவர் ஏசி.சண்முகம் சென்னை வேலப்பன் சாவடியில் “டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம்” நடத்திவருகிறார்.

அந்த பல்கலைக்கழக வளாகத்தில் தாய்மூகாம்பிகை பல் மருத்துவக் கல்லூரி மற்றும் சில கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளின் 30-ம் ஆண்டு விழா இன்று தொடங்கியது.


இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இதற்காக போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட ரஜினிகாந்துக்கு வழிநெடுகிழும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

குறிப்பாக ஈவேரா நெடுஞ்சாலையில் வழிநெடுகிழும் பதாகைகள், தோரணங்களை கட்டி அவரது ரசிகர்கள் திரளாக கூடி நின்று வரவேற்றனர்.

திறந்த காரில் நின்றவாறு ரசிகர்களை நோக்கி கையை அசைத்த ரஜினிகாந்த் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். பல்கலைக்கழகத்திற்கு வந்த அவரை ஏசி சண்முகம் வரவேற்றார்.

இதனை அடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் முழு உருவ வெண்கல சிலையை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். பின்னர், எம்.ஜி.ஆர் பெயரிலான விருதுகளையும் அவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு அங்குள்ள மாணவ-மாணவரிடையே கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மொரீஷியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி பரமசிவம்பிள்ளை வையாபுரி மற்றும் இலங்கை கல்வி மந்திரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளனர்.
https://goo.gl/1BKfyZ


18 Dec 2018

வீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா?- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்

14 Dec 2018

நான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்

14 Dec 2018

புயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

14 Dec 2018

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்

13 Dec 2018

பள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

13 Dec 2018

கழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்

13 Dec 2018

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

13 Dec 2018

தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு

11 Dec 2018

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

11 Dec 2018

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்