சென்னையில் தீக்குளித்த கார் டிரைவர் மணிகண்டன் மரணம்

சென்னையில் தீக்குளித்த  
கார் டிரைவர் மணிகண்டன் மரணம்
நெல்லையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் தாம்பரம் பகுதியில் தங்கி இருந்து, கிண்டியில் உள்ள தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் கார் டிரைவராக பணிபுரிகிறார்.


நேற்று மாலை வேளச்சேரிக்கு சவாரி சென்றுவிட்டு கிண்டிக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.


சென்னை தரமணி எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியில் வேளச்சேரி போக்குவரத்து போலீசார் 4 பேர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக மணிகண்டன் காரில் ‘சீட் பெல்ட்’ அணியாமல் வந்ததாக தெரிகிறது.

 இதை கண்டதும் அவரது காரை போலீசார் நிறுத்தினார்கள். காரில் ‘சீட் பெல்ட்’ அணியாமல் வந்ததால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறி அவரிடம் போக்குவரத்து போலீசார் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் போக்குவரத்து போலீசாருக்கும், மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது போக்குவரத்து போலீசார், டிரைவர் மணிகண்டனை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் மணிகண்டனின் ஓட்டுனர் உரிமம், செல்போன் ஆகியவற்றையும் போலீசார் பறித்துக்கொண்டனர்.

பொது இடத்தில் வைத்து தன்னை போலீசார் தாக்கியதால் அவமானம் அடைந்த டிரைவர் மணிகண்டன், அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து 1 லிட்டர் பெட்ரோல் வாங்கி வந்தார்.

தனது கார் முன் வந்த மணிகண்டன், போக்குவரத்து போலீசார் கண் எதிரேயே தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். அவரது உடல் முழுவதும் தீ பரவியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து போலீசார், அங்கிருந்து ஓடி விட்டனர்.

ஒரே ஒரு போக்குவரத்து போலீஸ்காரர் மட்டும் ஓடி வந்து மணிகண்டன் உடலில் எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தார். இதில் மணிகண்டன் படுகாயம் அடைந்தார்.

இதை கண்டதும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் அங்கு திரண்டு வந்தனர். எதற்காக தீக்குளித்தாய்? என மணிகண்டனிடம் விசாரித்தனர்.

அப்போது அவர், போக்குவரத்து போலீசார், காரில் ‘சீட் பெல்ட்’ அணியவில்லை என்று கூறி தன்னை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி தாக்கியதால் மனமுடைந்து தீ்க்குளித்ததாக கூறினார். இதனால் அந்த போக்குவரத்து போலீஸ்காரரும் அங்கிருந்து சென்று விட்டார்.

இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது. நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு திரண்டு வந்தனர். அதற்குள் தரமணி போலீஸ் ரோந்து வாகனம் அங்கு வந்து, தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய டிரைவர் மணிகண்டனை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மணி கண்டன் உயிரிழந்தார்.

ஓட்டுநர் தீக்குளித்த விவகாரத்தில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தாமரைச் செல்வன் பணியிடைநீக்கம் செய்யபட்டு உள்ளார்.19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி