tamilkurinji logo
 

சென்னையில் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி 3 ஏடிஎம்களில் ரூ.24 லட்சம் கொள்ளை ,ATM theft: Latest News, tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

ATM,theft:,Latest,News,,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

சென்னையில் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி 3 ஏடிஎம்களில் ரூ.24 லட்சம் கொள்ளை

First Published : Friday , 29th December 2017 07:36:20 PM
Last Updated : Friday , 29th December 2017 07:36:20 PM


சென்னையில் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி 3 ஏடிஎம்களில் ரூ.24 லட்சம் கொள்ளை ,ATM theft: Latest News, tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news


ஏடிஎம் எந்திரத்தில் பாஸ்வர்டை வைத்து நூதன முறையில் மூன்று ஏடிஎம் எந்திரங்களில் ரூ.23.7 லட்சத்தை திருடிக்கொண்டு மாயமான ஊழியரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஏடிஎம் எந்திரங்களில் பணம் போடும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர் தான் பணம் நிரப்பிய 3 ஏடிஎம் எந்திரந்திலிருந்து ரூ.23 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை பாஸ்வார்டை பயன்படுத்தி நூதன முறையில் திருடிச்சென்றுள்ளார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் சிஸ்கோ என்கிற தனியார் செக்யூரிட்டி நிறுவனம் உள்ளது. இவர்களின் பணி ஏடிஎம் எந்திரங்களில் பணம் நிரப்புவது.

இதில் பணம் நிரப்ப பாது காப்புடன் கூடிய ஜீப், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர், எந்திரத்தில் பணத்தை நிரப்பும் ஊழியர்கள் இருப்பார்கள்.

இந்நிறுவனத்தின் மேலாளராக சீனிவாசன்(40) என்பவர் பணியாற்றி வருகிறார். பணம் நிரப்ப உதவியாக பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

அதிக அளவு பணம் ஒரே நேரத்தில் பல எந்திரங்களில் நிரப்ப வேண்டுமானால் கோடிக்கணக்கில் கரன்சி நோட்டுகளை இரும்புப்பெட்டியில் வைத்து எடுத்துச் செல்வார்கள்.

இதற்கு அந்நிறுவனத்தின் மேலாளரும் உடன் செல்வார். எந்திரத்தில் பணத்தை நிரப்புவதற்கு முன்னர் எந்திரத்தை திறக்க பாஸ்வார்டை பயன்படுத்துவார்கள்.

கடந்த 16-ம் தேதி இந்நிறுவனத்திலிருந்து அயனாவரம், ராஜமங்கலம், ஐசிஎப் பகுதிகளில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்களில் பணம் நிரப்ப ஊழியர்கள் ஓட்டேரியை சேர்ந்த தினேஷ்(27) மற்றும் மணலியை சேர்ந்த குமார்(27) ஆகியோரை மேலாளர் பணத்துடன் அனுப்பி வைத்தார்.

ராஜமங்கலம் ஜி.கே.எம் காலனி, அயனாவரம் எம்.டி.எச் சாலை, ஐசிஎப் மேடவாக்கம் சாலையில் உள்ள ஏடிஎம்களில் பணத்தை நிரப்பினர்.

இந்த மூன்று ஏடிம்களும் எச்டிஎப்சி வங்கியின் ஏடிஎம்களாகும். மூன்று எந்திரங்களுக்கும் ஒரே பாஸ்வார்ட் என்பதால் மேலாளர் சீனிவாசன் செல்லவில்லை.

குமார் பணிக்கு சேர்ந்து ஒரு மாதமே ஆனதால் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் தினேஷுக்கு மட்டும் பாஸ்வார்டை சொல்லி அனுப்பி வைத்துள்ளார்.

தினேஷ் பணத்தை போடும் போது அவர் அறியாமல் பாஸ்வர்டை குறித்துக்கொண்ட குமார், அன்று இரவே மூன்று ஏடிஎம் மையங்களில் உள்ள எந்திரங்களில் அந்த பாஸ்வார்டை பயன்படுத்தி ரூ. 23 லட்சத்து 70 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தலை மறைவாகிவிட்டார்.

சாதாரணமாக யாரும் இதை கண்டுபிடிக்க வாய்ப்பில்லை என்று குமார் நினைத்துள்ளார்.

ஆனால் எச்டிஎப்சி வங்கியின் ஏடிஎம் தலைமை அலுவலகத்தில் ஜிகேஎம் காலனி ஏடிஎம் மையத்தில் 9 லட்சத்து 65 ஆயிரமும், ஐசிஎப் மேடவாக்கம் மையத்தில் 5 லட்சத்து 50 ஆயிரமும், அயனாவரம் எம்டிஎச் சாலை மையத்தில் 8 லட்சத்தி 57 ஆயிரமும் எந்த அக்கவுண்ட்டுக்கும் போகாமல் திடீரென குறைந்துள்ளது.

இது பற்றி தலைமை அலுவலகம் சென்னை அலுவலகத்துக்கு தகவல் அளிக்க பணம் மாயமான விவகாரம் வெளி வந்துள்ளது.

இது பற்றி விசாரணை நடத்த பணம் நிரப்பிய ஊழியர்கள் தினேஷ், குமாரை அழைக்க தினேஷ் அலுவலகம் வந்துள்ளார். குமார் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் வீட்டுக்கு தேடிப்போன போது அவர் தலைமறைவானது தெரிய வந்தது.

உடனடியாக தினேஷை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர் குற்றமற்றவர் என தெரிய வந்தது.

தினேஷுக்கு தெரியாமல் பாஸ்வர்டை குறித்துக்கொண்டு குமார் பணத்தை திருடிக்கொண்டு தலைமறைவானது தெரிய வந்துள்ளது.

பணம் பறிபோன எந்திரங்கள் மூன்றும் மூன்று வெவ்வேறான போலீஸ் எல்லையில் இருப்பதால் மூன்று காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி 3 ஏடிஎம்களில் ரூ.24 லட்சம் கொள்ளை ,ATM theft: Latest News, tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
சென்னையில் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி 3 ஏடிஎம்களில் ரூ.24 லட்சம் கொள்ளை ,ATM theft: Latest News, tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
சென்னையில் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி 3 ஏடிஎம்களில் ரூ.24 லட்சம் கொள்ளை ,ATM theft: Latest News, tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குடி போதையில் தகராறு செய்த கணவனை வெட்டிக்கொன்ற மனைவி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, தொண்டமாந்துறையை சேர்ந்தவர் செல்வராஜ் (46). கூலித்தொழிலாளி. இவரது மனைவி லூர்துமேரி(41). இவர்களுக்கு ஜெனிபர் டயானா(24), ஆனந்தி(23) என்ற 2 மகள்கள், ஆண்டனி(21) என்ற மகன் உள்ளனர். ஜெனிபருக்கு திருமணமாகி அருகில் உள்ள அன்னமங்கலத்தில் வசிக்கிறார். தொழுநோயால்

மேலும்...

 ஆர்.கே. நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்தது உண்மைதான்: தினகரன் ஆதரவாளர் ராஜசேகரன்
ஆர்.கே.நகர் வெற்றிக்கு டிடிவி.தினகரன் 20 ரூபாய் டோக்கன் கொடுத்தது உண்மை தான் என்று அவரது ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகரன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் முசிறியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தினகரன் அணியின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரான ராஜசேகரன்,

மேலும்...

 மணல் குவாரிகள் மீதான தடை தொடரும் - தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி
 தமிழகத்தில் செயல்படும் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்தில் மூட வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்ற அமர்வு உறுதி செய்தது. இது தொடர்பாக 3 மாவட்ட ஆட்சியர்கள் தாக்கல் செய்த மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.மலேசியாவில்

மேலும்...

 ராணுவ மரியாதையுடன் தமிழக வீரர் சுரேஷின் உடல் சொந்த ஊரில் அடக்கம்
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரேஷ் உடல் அரசு மரியாதையுடன் இன்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா பகுதியில் எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in