tamilkurinji logo


 

சென்னையில் 7- வது மாடியிலிருந்து தவறி விழுந்து குழந்தை பலி,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

சென்னையில் 7- வது மாடியிலிருந்து தவறி விழுந்து குழந்தை பலி

First Published : Thursday , 30th August 2018 07:23:02 PM
Last Updated : Thursday , 30th August 2018 07:23:02 PM


சென்னையில்  7- வது மாடியிலிருந்து தவறி விழுந்து குழந்தை பலி,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

சென்னை சூளைமேட்டில் தாயின் அஜாக்கிரதை காரணமாக அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது பெண் குழந்தை பலியானது.

சென்னை சூளைமேட்டில் சித்ரா அவென்யூவில் மஞ்சு பிளாட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 6 அடுக்குகளும், 7- வதாக மொட்டைமாடியும் இந்த கட்டடத்தில் உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனியார் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றுபவர் கோபால் (60).

இவர் நேபாளத்தைச் சேர்ந்தவர். இவருடைய மனைவி கீதா(34). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். 4 வயதில் சாரதா என்ற பெண் குழந்தையும், ஒரு கைக்குழந்தையும் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்ப்பதால் அந்த நிறுவனம் அமைந்துள்ள மஞ்சு அபார்ட்மெண்டிலேயே கோபால் குடும்பம் வசிக்க மொட்டை மாடியில் சிறிய அறை ஏற்படுத்தி தந்துள்ளனர்.

குழந்தை சாரதா அருகில் உள்ள பள்ளியில் யூகேஜி படித்து வந்தார். நேற்றிரவு பள்ளி சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு வந்த சாரதா, வீட்டுப்பாடங்களை முடித்துவிட்டு அப்படியே படுத்து தூங்கிவிட்டார். அப்போது வீட்டின் விளக்கை அணைத்துவிட்டு தாயார் கீதா கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு கீழே 6 வது தளத்தில் உள்ள வீட்டில் போய் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது இரவு 8 மணி அளவில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை சாரதா திடீரென கண் விழித்துள்ளார். வீட்டில் யாருமில்லை என்றவுடன் இரவு நேரம் என்பதால் பயந்துபோய் அழுதுள்ளார். அம்மாவைத் தேடி வேகமாக அழுதபடி பால்கனி நோக்கி வந்துள்ளார். அந்த பால்கனி கம்பியால் ஆனது.

சாதாரணமாக குழந்தைகள் அதன் வழியாக எட்டிப்பார்க்க முடியும். அவ்வாறு அம்மாவை தேடி பால்கனி வழியாக எட்டிப்பார்த்த குழந்தை சாரதா எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார். ஏழாவது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் பலத்த காயத்துடன் கீழே கிடந்துள்ளார்.

குழந்தை மேலிருந்து கீழே விழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த கீதாவும், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் அலறி அடித்து கீழே ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தை சாரதாவை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சாரதாவின் உடல்நிலை மோசமாக இருக்கவே மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் குழந்தை சாரதா பலியானார். இதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாயின் அஜாக்கிரதையால், குழந்தை 7-வது மாடியில் இருந்து விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


சென்னையில்  7- வது மாடியிலிருந்து தவறி விழுந்து குழந்தை பலி,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema சென்னையில்  7- வது மாடியிலிருந்து தவறி விழுந்து குழந்தை பலி,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema சென்னையில்  7- வது மாடியிலிருந்து தவறி விழுந்து குழந்தை பலி,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in