சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு உதவி ஆய்வாளர் தற்கொலை

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில்  துப்பாக்கியால் சுட்டு உதவி ஆய்வாளர் தற்கொலை
சென்னை அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகள் நெருக்கடி மற்றும் பணிச்சுமையே தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.சென்னை அயனாவரம் கே-2 காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சதீஷ்குமார் (33). கீழ்ப்பாக்கம் அருகே உள்ள டிபி சத்திரம் காவலர் குடியிருப்பில் தனியாக வசித்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும் வீட்டுக்குச் சென்றார்.


பின்னர் நள்ளிரவு 1.45 மணிக்கு சாதாரண உடையில் அவர் காவல் நிலையம் வந்தார்.

காவல் நிலையத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சிரஞ்சீவியிடம், பாதுகாப்பு பணிக்குச் செல்ல வேண்டும் என்று கூறி ஆவண புத்தகத்தில் கையெழுத்து போட்டுள்ளார்.

தொடர்ந்து அவரிடம் இருந்து கைத்துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியின் சாவியை வாங்கிச் சென்று, பெட்டியை திறந்து தனக்கு வழங்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை எடுத்துள்ளார்.

இதையடுத்து ஒரு வெள்ளை தாளை எடுத்து எழுதி அருகில் இருந்த மேஜை மீது வைத்துவிட்டு, துப்பாக்கியுடன் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்துள்ளார்.

சிறிது நேரத்தில் மீண்டும் உள்ளே சென்ற அவர் துப்பாக்கியை தனது நெற்றிப் போட்டில் வைத்துள்ளார்.

இதனைப் பார்த்து பதறிப் போன பணியில் இருந்த சிரஞ்சீவி, ‘என்ன சார் விளையாடாதீங்க’ என்று கூறியுள்ளார்.

துப்பாக்கியை அவரை நோக்கி காண்பித்துவிட்டு காவல் நிலைய வாயில் அருகே சென்ற அவர், தனது வலது புறம் காதுக்கு மேல் துப்பாக்கியை வைத்து தனக்குத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் தற்கொலை செய்து கொண்டது குறித்து தகவல் அறிந்தும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடல் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முன்னதாக அவர் மேஜை மீது தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், ‘என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை.

எவ்வித காரணமும் இல்லை‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, இந்த தற்கொலை குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான தற்கொலை செய்து கொள்ளும் காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரவுப் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சிரஞ்சீவி உள்ளிட்ட காவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தடயவியல் நிபுணர்கள் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் பிற்பகல் 2.30 மணி அளவில் சதீஷ்குமார் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.


சென்னையில் கடந்த 4-ம் தேதி மெரினா கடற்கரை ஜெயலலிதா நினைவிடத்தில் பணியாற்றிய ஆயுதப்படை காவலர் அருண்ராஜ் என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்போது உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒரே வாரத்தில் காவல் துறையைச் சேர்ந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.https://goo.gl/fgLe7Y


18 Dec 2018

வீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா?- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்

14 Dec 2018

நான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்

14 Dec 2018

புயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

14 Dec 2018

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்

13 Dec 2018

பள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

13 Dec 2018

கழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்

13 Dec 2018

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

13 Dec 2018

தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு

11 Dec 2018

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

11 Dec 2018

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்