சென்னை தொழிலதிபர் மீது சி.பி.ஐ. வழக்குபதிவு நிலக்கரி கொள்முதலில் ரூ.487 கோடி முறைகேடு

சென்னை தொழிலதிபர் மீது சி.பி.ஐ. வழக்குபதிவு  நிலக்கரி கொள்முதலில் ரூ.487 கோடி முறைகேடு
இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் அரசுக்கு ரூ. 487 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர், என்.டி.பி.சி. எம்.எம்.டி.சி. ஏ.பி.சி.பி.எல். நிறுவனத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்தோனேசியாவில் இருந்து கடந்த 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை தேசிய அனல் மின் உற்பத்தி கழகத்துக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது.


தரமான நிலக்கரி என்ற பெயரில் தரக்குறைவான நிலக்கரியை இறக்குமதி இறக்குமதி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்த வகையில் அரசுக்கு ரூ. 487 கோடி இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து, சென்னையைச் சேர்ந்த கோஸ்டல் எனர்ஜி  நிறுவனத்தின் புரோமோட்டர் ஆகமது ஏ.ஆர். புகாரி, தேசிய அனல் மின் கழகம்(என்.டி.பி.சி.), உலோகம் மற்றும் தாது வர்த்தக கழகம்(எம்.எம்.டி.சி.), ஆரவளி மின் நிறுவனம் (ஏ.பி.சி.பி.எல்.) ஆகியவற்றில் பணிபுரியும் சில அடையாளம் தெரியாத அதிகாரிகள் மீது சி.பி.ஐ. இன்று வழக்குப் பதிவு செய்துள்ளது.

குற்றச்சதி, அரசு அதிகாரிகள் தவறான நடத்தையில் ஈடுபடுதல், ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் என்.டி.பி.சி. மற்றும் எம்.எம்.டி.சி. ஆகியவை மத்திய அரசின் நிறுவனங்களாகும். ஏ.பி.சி.பி.எல். நிறுவனம் என்பது, என்.டி.பி.சி. ஹரியானா, டெல்லி அரசுகள் கூட்டில் செயல்படும் நிறுவனமாகும்.

இதில் என்.டி.பி.சி. நிறுவனம் 50 சதவீத பங்குகளையும், டெல்லி, ஹரியானா அரசுகள் தலா 25 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளன.


https://goo.gl/mwPzMa


19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி