tamilkurinji logo
 

சென்னை பேராசிரியை உள்பட 8 பேரை ஏமாற்றி திருமணம் - திருமண தகவல் மையம் உடந்தை,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news



செய்திகள் >>> தமிழகம்

சென்னை பேராசிரியை உள்பட 8 பேரை ஏமாற்றி திருமணம் - திருமண தகவல் மையம் உடந்தை

First Published : Tuesday , 9th January 2018 07:13:04 PM
Last Updated : Tuesday , 9th January 2018 07:13:04 PM


சென்னை பேராசிரியை உள்பட 8 பேரை ஏமாற்றி திருமணம் - திருமண தகவல் மையம்  உடந்தை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் குமுதவள்ளி (வயது 45). கணவரை இழந்த இவர் காந்திபுரத்தில் உள்ள திருமண தகவல் மையம் மூலமாக வெள்ளலூரை சேர்ந்த புருசோத்தமன் (57) என்பவரை சந்தித்தார்.

புருசோத்தமன் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருவதாக கூறினார். தன்னுடைய மனைவி இறந்து விட்டதாகவும், கல்லூரி படிக்கும் தன்னுடைய மகளை பார்க்க ஆள் இல்லாததால் மறுமணம் செய்வதாகவும் கூறினார்.

இதை நம்பிய குமுதவள்ளி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புருசோத்தமனை திருமணம் செய்து கொண்டார். சில நாட்களில் புருசோத்தமன் தனது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி குமுத வள்ளியிடம் இருந்து ரூ.3 கோடி வாங்கினார். அதன் பிறகு அவர் தலைமறைவாகி விட்டார்.

இதனால் சந்தேகம் அடைந்த குமுதவள்ளி, புருசோத்தமன் பற்றி விசாரித்தபோது அவர் பல பெண்களை திருமணம் செய்து கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து குமுதவள்ளி போத்தனூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் புருசோத்தமனின் மோசடி பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இது குறித்து போலீசார் கூறியதாவது:–

தொழில் ரீதியாக பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்வதை வாடிக்கையாக கொண்ட புருசோத்தமன் கடந்த சில வருடங்களாக பணக்கார பெண்களை திருமணம் செய்து மோசடி செய்துள்ளார்.

இவரது மோசடிக்கு கோவை காந்திபுரத்தில் திருமண தகவல் மையம் நடத்தி வரும் மோகன், வனஜா குமாரி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

குமுதவள்ளி தவிர இவர் கோவையை சேர்ந்த சபீதா, உஷாராணி, விமலா, சுசீலா, சென்னை அண்ணா நகரை சேர்ந்த பேராசிரியை இந்திராகாந்தி, ஈரோட்டை சேர்ந்த சித்ரா ஆகியோரை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்துள்ளார்.

இவர்களில் குமுதவள்ளி, இந்திராகாந்தி, சுசீலா ஆகியோர் கோவை மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

கடைசியாக திருப்பூரை சேர்ந்த சாந்தினியை திருமணம் செய்துள்ளார். இவர் மேலும் பல பெண்களை திருமணம் செய்து மோசடி செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் பிடிபடும் போது அவரது மோசடி பற்றி முழுமையாக தகவல்கள் தெரிய வரும்.

தலைமறைவான புருசோத்தமன், திருமண தகவல் மைய நிர்வாகிகள் மோகன், வனஜாகுமாரி ஆகியோரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

புருசோத்தமனின் வலையில் விழுந்தவர்களில் சென்னை அண்ணாநகரை சேர்ந்த இந்திராகாந்தி என்ற கல்லூரி பேராசிரியையும் ஒருவர் ஆவார்.

கணவரை பிரிந்து வாழ்ந்த இவரை புருசோத்தமன் ஆன்லைன் மூலமாக தொடர்பு கொண்டு இனிக்க, இனிக்க பேசினார்.

திருமணத்துக்கு பின்னர் சில மாதங்கள் சென்னையில் தங்கிய இவர் வீட்டை துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்வது முதல் பாத்ரூம் கழுவுவது வரை அனைத்து வீட்டு வேலைகளையும் செய்து இந்திராகாந்தியின் மனதை கவர்ந்துள்ளார்.

பின்னர் தனக்கு தொழிலில் சிறிய பிரச்சினை உள்ளது. சொத்தை விற்று பணம் தந்தால் பிரச்சினையை சரி செய்து விடுவேன். பின்னர் நாம் கோவை சென்று நிம்மதியாக வாழலாம் என்று கூறியதன் அடிப்படையில் இந்திரா காந்தி தனது சொத்தை விற்று ரூ.1 கோடி கொடுத்து ஏமாந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கோவை கல்யாண மன்னன் புருசோத்தமன் மீது கோவை நகர குற்றப்பிரிவு போலீசில் மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

சென்னை பேராசிரியை உள்பட 8 பேரை ஏமாற்றி திருமணம் - திருமண தகவல் மையம்  உடந்தை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
சென்னை பேராசிரியை உள்பட 8 பேரை ஏமாற்றி திருமணம் - திருமண தகவல் மையம்  உடந்தை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
சென்னை பேராசிரியை உள்பட 8 பேரை ஏமாற்றி திருமணம் - திருமண தகவல் மையம்  உடந்தை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நிர்மலா தேவி விவகாரம்; பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும்: நடிகை குஷ்பு
பேராசிரியை நிர்மலா தேவியின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய வகையில் செல்போனில் பேசியதாக வந்த புகாரையடுத்து கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி (46)

மேலும்...

 பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இழுப்பது தவறானது, ஆதாரமற்றது - ஆளுநர் பன்வாரிலால்
மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ வாட்ஸ் அப்பில் சமீபத்தில் வெளியானது. அதில் மாணவிகள் 4 பேரை தவறான வழிக்கு அழைத்து செல்வது போன்று உரையாடல் அமைந்து

மேலும்...

 பேராசிரியை நிர்மலா தேவி முகத்தை கூட நான் பார்த்ததில்லை - ஆளுநர் பன்வாரிலால்
மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ வாட்ஸ் அப்பில் சமீபத்தில் வெளியானது. அதில் மாணவிகள் 4 பேரை தவறான வழிக்கு அழைத்து செல்வது போன்று உரையாடல்

மேலும்...

 கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயற்சி
கடலூர் மாவட்டம் தியாகவள்ளியை அடுத்த நொச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டியன் (வயது 28). விவசாயி. இவரது மனைவி செந்தமிழ்செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.தங்கபாண்டியனின் தாய்-தந்தை மற்றும் சகோதரர் மருதுபாண்டி அவரது குடும்பத்தினர் உள்பட 16 பேருடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in