சேவாக் உலக சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா

சேவாக் உலக சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா
இலங்கைக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்த ரோகித் சர்மா, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 2-வது இரட்டைச்சத சாதனையுடன் சேவாகின் சாதனையையும் முறியடித்தார். மேலும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 250 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார் ரோகித் சர்மா.

கொல்கத்தாவில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் 4-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 2-வது இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

மேலும் சேவாக் மே.இ.தீவுகளுக்கு எதிராக எடுத்த 219 ரன்களையும் கடந்து சாதனை புரிந்தார். எரங்கா பந்தை லாங் ஆஃப் திசையில் மிகப்பெரிய சிக்சர் அடித்து சேவாக் எடுத்த அதிகபட்ச ஒருநாள் கிரிக்கெட் ரன்கள் சாதனையைக் கடந்தார் ரோகித்.

ஏற்கெனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209 ரன்களை எடுத்த ரோகித் சர்மா, இன்று மீண்டும் இரட்டைச்சதம் விளாசினார்.

முதல் 100 பந்துகளில் சரியாக 100 ரன்களை எடுத்த ரோகித், அடுத்த 50 ரன்களை 26 பந்துகளில் எடுத்து 150 ரன்கள் எடுத்தார்.


பிறகு 151 பந்துகளில் 200 ரன்களை கடந்தார் ரோகித். குலசேகரா பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையில் அபார பவுண்டரி அடித்து அவர் இரட்டைச் சதம் கண்டார். இரண்டாவது 100 ரன்களை அவர் 51 பந்துகளில் எடுத்தார். இதில் அவர் 25 பவுண்டரிகளையும் 5 சிக்சர்களையும் அடித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்த போதும் கோலி ரன் அவுட் ஆனார். இந்த முறையும் கோலி ரன் அவுட் ஆனார்.

சச்சின் டெண்டுல்கர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதன் முதலாக இரட்டைசதம் எடுத்து சாதனை நிகழ்த்தினார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் தற்போது இந்திய அணியிலிருந்து 4 இரட்டைச் சதங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
https://goo.gl/NR4e9E


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்