tamilkurinji logo


 

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய பில் கலெக்டர்: வேலைக்கு சேர்ந்த 6 ஆண்டுகளில் 20 பிளாட், ரூ.50 கோடி சொத்து,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> இந்தியா

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய பில் கலெக்டர்: வேலைக்கு சேர்ந்த 6 ஆண்டுகளில் 20 பிளாட், ரூ.50 கோடி சொத்து

First Published : Friday , 1st June 2018 01:09:28 PM
Last Updated : Friday , 1st June 2018 01:09:28 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 288

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய பில் கலெக்டர்: வேலைக்கு சேர்ந்த 6 ஆண்டுகளில்  20 பிளாட், ரூ.50 கோடி சொத்து,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

ஆந்திராவில் நகராட்சி பில் கலெக்டர் ஒருவர் பணிக்கு சேர்ந்த 6 ஆண்டுகளில், 4 வீடுகள், 20 வீட்டுமனைகள், 50 கோடி ரூபாய் சொத்து, என சொத்து குவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

அரசியல்வாதிகள் பலர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து வழக்குகளை சந்தித்து வருவது அவ்வப்போது நடந்து வரும் சம்பவம். ஆனால் நகராட்சி ஊழியர் ஒருவர், அதுவும் பில் கலெக்டராக பணியாற்றி வரும் ஒருவர் பல கோடி சொத்து குவித்து சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் குண்டூர் நகராட்சியில் பில் கலெக்டராக பணியாற்றி வருபவர் முத்ரபோயினா மாதவ். இதே பணியில் இருந்த அவரது தந்தை கடந்த 2012-ம் ஆண்டு மரணம் அடைந்தார். பணியில் இருந்தபோது அவர் உயிரிழந்ததால், வாரிசான மாதவுக்கு கருணை அடிப்படையில் இந்த வேலை கிடைத்தது.

பணியில் சேர்ந்தது முதல் அவர் பலவித ஊழல்கள் செய்ததாக கூறப்படுகிறது. முறைகேடான முறையில் சொத்து விவரங்களுக்கு குறைவான தொகைக்கு ரசீது கொடுத்து அதற்காக லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.


குண்டூரில் உள்ள வீடுகள், வணி வளாகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் என நகராட்சியின் கீழ் வரும் அனைத்திற்கும் இவர் வைத்ததே வரி.


குண்டூர் அருண்டல்பேட் பகுதியில் மனைவியின் பெயரில் தனியாக அலுவலகம் ஒன்றையும் இவர் நடத்தி வந்துள்ளார். இதன் மூலம் தனது வரவு செலவுகளை நடத்தி வந்துள்ளார்.

வேறு சில அதிகாரிகளிடன் துணையுடன் இந்த முறைகேடு தொடர்ந்து அரங்கேறி வந்தது. புகார்கள் அதிமானதால், 2016-ம் ஆண்டு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனாலும் பின்னர் பணியில் சேர்ந்தார். அதன் பிறகும் முறைகேடுகள் தொடர்ந்தன.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாதவ் மீது புகார்கள் குவிந்தன. இதையடுத்து குண்டூர், மச்சாவரம், ஆகிய பகுதிகளில் மாதவிற்கு சொந்தமான இடங்களில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் இரு தினங்களுக்கு முன்பு சோதனை நடத்தினர்.

மாதவுக்கு சொந்தமான 7 இடங்கள், அவரது உறவினர்களுக்கு சொந்தமான 2 இடங்களில் சோதனை நடந்தது. இதில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், வீட்டு பத்திரங்கள், நகைகள், என மொத்தம் 50 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மாதவிற்கு சொந்தமாக 4 வீடுகள், 20 வீட்டுமனைகள், பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட பிறகு குண்டூர் பகுதியில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி அடைந்து வருகிறது.

ஊழல் மூலம் பெறப்பட்ட பணத்தை மாதவ் நிலங்களில் முதலீடு செய்து பெருமளவு பணம் சம்பாதித்துள்ளார். அவரது முதலீடுகளுக்கு அதிகமான வருவாய் கிடைத்ததால், குறைவான காலத்திலேயே 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவு அவருக்கு சொத்து சேர்ந்ததாக கூறப்படுகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய பில் கலெக்டர்: வேலைக்கு சேர்ந்த 6 ஆண்டுகளில்  20 பிளாட், ரூ.50 கோடி சொத்து,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய பில் கலெக்டர்: வேலைக்கு சேர்ந்த 6 ஆண்டுகளில்  20 பிளாட், ரூ.50 கோடி சொத்து,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய பில் கலெக்டர்: வேலைக்கு சேர்ந்த 6 ஆண்டுகளில்  20 பிளாட், ரூ.50 கோடி சொத்து,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை

மேலும்...

 நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணிஇல்லை : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி

மேலும்...

 ஜிவாதான் என் மனஅழுத்தத்தைப் போக்குபவள்: தோனி உருக்கம்
என் மகள் ஜிவாதான் என் மனஅழுத்தத்தை போக்கும் மருந்து, மூன்றரை வயதிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார் என்று மகேந்திர சிங் தோனி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்தோனியின் மூன்றரை வயது மகள் ஜிவா. சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்

மேலும்...

 கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழையால் அம்மாநில அணைகள் விரைவாக நிரம்பி வருவதால் கபினி அணையில் இருந்து 70,000 கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கனஅடி என கர்நாடக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in