tamilkurinji logo


 

ஜப்பான் போராடி டிரா : கால்பந்து,fifa world cup news

fifa,world,cup,news




செய்திகள் >>> விளையாட்டு

ஜப்பான் போராடி டிரா : கால்பந்து

First Published : Thursday , 19th June 2014 11:27:44 PM
Last Updated : Thursday , 19th June 2014 11:27:44 PM


ஜப்பான் போராடி டிரா : கால்பந்து,fifa world cup news

ஜப்பான், கிரீஸ் அணிகள் மோதிய உலக கோப்பை கால்பந்து தொடரின் லீக்  போட்டி ‘டிராவில்’ முடிந்தது.

பிரேசிலில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இன்று அதிகாலை நடந்த இதன் ‘சி’ பிரிவு லீக் போட்டியில் ஜப்பான், கிரீஸ் அணிகள் மோதின.

ஆரம்பம் முதல் இரு அணி வீரர்களும் இத்தொடரில் முதல் வெற்றியை பெற கடும் போராட்டத்தை வெளிப்படுத்தியது. போட்டியின் 29வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஹோண்டாவுக்கு கிடைத்த ‘பிரி கிக்’ வாய்ப்பை வீணடித்தார்.

தொடர்ந்து போட்டியின் 37வது நிமிடத்தில் ஏற்கனவே இரண்டு முறை ‘எல்லோ கார்டு’ மூலம் எச்சரிக்கப்பட்ட கிரிஸ் அணி கேப்டன் கட்சோர்ஏனியஸ் இம்முறை ‘ரெட் கார்டு ’ மூலம் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து முதல் பாதியின் முடிவில், கோல் எதுமின்றி போட்டி சமநிலை வகித்தது.

பின் தொடங்கிய இரண்டாவது பாதியில் 10 வீரர்களுடன் போட்டியை தொடர்ந்த கிரிஸ் அணி வீரர்கள் எழுச்சி பெற்றனர். முதல் பாதியைப்போல இல்லாமல் சுதந்திரமாக செயல்பட்ட கிரிஸ் அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்‌தை வெளிப்படுத்தினர்.

அந்த அணியின் ஜார்ஜியஸ் சமர்ஸ், பெர்ணாண்டோ சான்டோஸ், ஜிகாஸ் ஆகியோரின் ஆட்டம் ஜப்பான் வீரர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. ஆனால் இதை ஜப்பான் கோல் கீப்பர் சிறப்பாக சமாளிக்க, இரண்டாவது பாதியும் கோல் எதுவும் இல்லாமல் முடிந்தது. முடிவில், போட்டி 0-0 என ‘டிரா’ ஆனது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி அளிக்கப்பட்ட்து.

 

ஜப்பான் போராடி டிரா : கால்பந்து,fifa world cup news ஜப்பான் போராடி டிரா : கால்பந்து,fifa world cup news ஜப்பான் போராடி டிரா : கால்பந்து,fifa world cup news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பாட்மின்டன் தரவரிசை : சாய்னா மீண்டும் நம்.1
 உலக பாட்மின்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனை செய்னா நேவல் மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறினார்.பாட்மின்டன் அரங்கில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கான ‘ரேங்கிங்’ (தரவரிசை) பட்டியலை, சர்வதேச பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) நேற்று வெளியிட்டது. இதன் பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் செய்னா 2வது

மேலும்...

 பயங்கர பவுன்சரில் காயமடைந்த ஆஸி. வீரர் பிலிப் ஹியூஸ் உயிருக்குப் போராட்டம்
கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஸி. உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் ஆடிய பில் ஹியூஸ், பவுன்சர் ஒன்று தாக்கியதில் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். அவர் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்று ஆஸ்திரேலிய செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கு

மேலும்...

 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து- சென்னை அணி 5-வது வெற்றி
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணி 3–0 என்ற கோல் கணக்கில் மும்பையை சாய்த்து 5–வது வெற்றியை பெற்றது.இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரில் மும்பையில் நேற்றிரவு நடந்த 39–வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி.–சென்னையின்

மேலும்...

 45 நாடுகள் பங்கேற்பு ஆசிய விளையாட்டு இன்று தொடக்கம்: 515 இந்தியர்கள் கலந்து கொள்கிறார்கள்
45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டி தென்கொரியாவில் இன்று தொடங்குகிறது.அதிக நாடுகள் பங்கேற்கும் கடும் சவால் நிறைந்த போட்டிகளில் ஒலிம்பிக்குக்கு அடுத்து மிகப்பெரியது ஆசிய விளையாட்டு. இப்போட்டி முதல்முறையாக 1951–ம் ஆண்டு டெல்லியில் நடந்தது. அதன் பிறகு 4 ஆண்டுகளுக்கு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in