ஜூன் 27-ம் தேதி நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ ட்ரெய்லர் வெளியீடு

ஜூன் 27-ம் தேதி  நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ ட்ரெய்லர் வெளியீடு
 நயன்தாரா நடித்துள்ள ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் ட்ரெய்லர் ஜூன் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது.

‘டிமான்ட்டி காலனி’ படத்தைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் படம் ‘இமைக்கா நொடிகள்’. நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில், அவருடைய கணவராக கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அதர்வா - ராஷி கண்ணா மற்றொரு ஜோடியாக நடித்திருக்கின்றனர். இயக்குநரும் நடிகருமான அனுராக் கஷ்யப், முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ள இந்தப் படத்துக்கு, ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, புவன் ஸ்ரீநிவாசன் எடிட் செய்துள்ளார். கேமியோ ஃபிலிம்ஸ் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

த்ரில்லர் வகையைச் சேர்ந்த இந்தப் படத்தின் ஷூட்டிங், கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது. பெரும்பாலான படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற்றுள்ளது. அதர்வாவுக்கு அக்காவாக நயன்தாரா நடித்துள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து பல நாட்களாகிறது.

இந்நிலையில், வருகிற 27-ம் தேதி படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்படும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

https://goo.gl/4LnDh8


18 Feb 2019

மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்

06 Feb 2019

பிரபல நடிகை தற்கொலை; செல்போன் பேச்சுக்கள் குறித்து போலீஸ் விசாரணை

02 Jan 2019

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு

27 Dec 2018

ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி

27 Dec 2018

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்

21 Dec 2018

நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்.

18 Dec 2018

மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்

18 Dec 2018

மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்

13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்