tamilkurinji logo


 

ஜெயலலிதாவின் உண்மையான மகள் நான்தான்-ஜனாதிபதி, பிரதமருக்கு பெங்களூரு பெண் கடிதம்,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்
செய்திகள் >>> தமிழகம்

ஜெயலலிதாவின் உண்மையான மகள் நான்தான்-ஜனாதிபதி, பிரதமருக்கு பெங்களூரு பெண் கடிதம்

First Published : Wednesday , 30th August 2017 11:30:12 AM
Last Updated : Wednesday , 30th August 2017 11:30:12 AM


ஜெயலலிதாவின் உண்மையான மகள் நான்தான்-ஜனாதிபதி, பிரதமருக்கு பெங்களூரு பெண் கடிதம்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான் இருக்கும் வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.


இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்கிற அம்ருதா (வயது 38) என்ற பெண் ஜெயலலிதா தன் சொந்த தாய் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.


இது தொடர்பாக அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-


கடந்த 1960-ம் ஆண்டு பிரபல நடிகையாக இருந்த என் பாட்டி சந்தியா- ஜெயராம் தம்பதியின் 3 பிள்ளைகளில் என் தாய், ஜெயலலிதா என்கிற கோமளவள்ளியும் ஒருவர். அவர் மகள் தான் நான். என் பெயர் மஞ்சுளா என்கிற அம்ருதா என்றும், அம்மு என்றும் என்னை செல்லமாக அழைப்பர். பெற்றோரை இழந்த பின் என் தாய் மன அழுத்தத்துக்கு ஆளானார்.

அப்போது தெலுங்கு நடிகர் சோபன்பாபு என் தாய் மீது அதிக அக்கறை காட்டினார். அவர் பராமரிப்பில் என் தாயார் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார். அவர்கள் இடையிலான நட்பு காதலாக மாறியது.இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். திருமணம் செய்ய முடிவு செய்தனர் என்றாலும், சோபன்பாபுவின் முதல் மனைவியின் எதிர்ப்பால், திருமணம் நின்று போனது.

கர்ப்பமாக இருந்த என் தாய், 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி என்னை பெற்றெடுத்தார்.


சம்பிரதாயமிக்க குடும்பம் என்பதால் ஜெயலலிதா, சோபன்பாபு உறவை ஏற்க எங்கள் குடும்பத்தினர் மறுத்தனர். இதனால் தன் குழந்தையை தன் சகோதரி சைலஜாவிடம் என் தாய் ஒப்படைத்தார்.

பெங்களூருவில் பணியாற்றி வந்த சைலஜா-சாரதி தம்பதியினர் என்னை சொந்த மகளாகவே வளர்த்து வந்தனர்.


ஆனால், ஜெயலலிதாவின் மகள் என்ற ரகசியத்தை எங்கும் கூறவில்லை. அவர்களிடம் ஜெயலலிதா சத்தியம் வாங்கியுள்ளதாக தெரிகிறது.

1996-ல் என்னிடம் ஒரு சீட்டு எழுதி கொடுத்த சைலஜா சென்னை சென்று ஜெயலலிதாவை சந்தித்து வரும்படி கூறினார்.


நானும், போயஸ் கார்டனுக்கு சென்று அவரை சந்தித்தேன். என்னை பார்த்தவுடன் வாரி அணைத்து பாசத்தை காட்டி உபசரித்தார்.

 இது எனக்கு ஆச்சரியம் அளித்தது. அதன் பின் பலமுறை அவரை சந்தித்தேன். ஆனால் ஒரு முறை கூட என் சொந்த தாய் என்று கூறியதில்லை. எந்த காரணத்தினாலும் அரசியலுக்கும், சினிமாவுக்கும் வரவேண்டாம் என என்னை எச்சரித்திருந்தார்.


ஜெயலலிதா இறந்த பின் தீபா, தீபக் ஆகியோர் தான் என் அம்மாவின் சொத்துக்கு வாரிசுதாரர்கள் என செய்தி வெளியானது. இதை பார்த்த அமெரிக்காவில் உள்ள என் உறவினர் ஜெயலட்சுமி, ஜெயலலிதாவின் ஒரே மகள் நான் தான் என்பதை என்னிடம் கூறினார்.

பசவனகுடியில் வசிக்கும் மற்றொரு உறவினர் லலிதாவும், இவ்வி‌ஷயத்தை உறுதிபடுத்தினார். நான் பிறந்தபோது ரஞ்சினி ரவீந்திரநாத், லலிதா ஆகியோரும் என் தாயாரை பராமரித்துள்ளனர்.

அவர்களுக்கு என் பிறப்பு ரகசியம் தெரிந்துள்ளது. ஜெயலலிதாவின் இறப்பு இயற்கையான மரணம் அல்ல. உடல் நிலை பாதிப்பாலும் அவர் இறக்கவில்லை.


2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி ஜெயலலிதா தாக்கப்பட்டுள்ளார். எனவே, சசிகலா நடராஜன், தினகரன், தீபக் ஜெயகுமார், ஜெயலலிதாவின் முதன்மை செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும்.

என் தாய் ஜெயலலிதா இறப்புக்கு சசிகலா உள்பட பலரும் காரணம். இது தொடர்பாக உச்சநீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ., சிறப்பு குழு விசாரணை நடத்த வேண்டும்.


இறப்பின் காரணத்தை தெரிந்து கொள்ள அவர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். என் தாய், அவர் தான் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. என்னும் மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் மஞ்சுளா கூறியுள்ளார்.


ஜெயலலிதாவின் உண்மையான மகள் நான்தான்-ஜனாதிபதி, பிரதமருக்கு பெங்களூரு பெண் கடிதம்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
ஜெயலலிதாவின் உண்மையான மகள் நான்தான்-ஜனாதிபதி, பிரதமருக்கு பெங்களூரு பெண் கடிதம்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
ஜெயலலிதாவின் உண்மையான மகள் நான்தான்-ஜனாதிபதி, பிரதமருக்கு பெங்களூரு பெண் கடிதம்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த சிறுவன்
ஈரோடு அருகே அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் ஒருவர் சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்துள்ளார். ஈரோடு அருகே கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்தவர் பாஷா - அஃப்ரோஸ் பேகம் தம்பதியினர். இவர்களின் மகன் முஹம்மது

மேலும்...

 தனியாக வீட்டில் இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை
 திருப்பத்தூா் அருகே தனியாக வீட்டில் இருந்த மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருப்பத்தூா் அருகே கீழச்சிவல்பட்டி ஒன்றியத்தைச் சோ்ந்த அச்சரம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அழகு என்பவர்  மகள் அழகுதேவி(17). வாய் பேச முடியாத

மேலும்...

 சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை உறுதி
சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற வழக்கு: குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை உறுதி சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட  தூக்குதண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சென்னை மாங்காட்டை அடுத்த மெளலிவாக்கம்

மேலும்...

 திருப்பூர் தொழில் அதிபர் கடன் தொல்லையால் தற்கொலை
திருப்பூர் பாளையகாடு காயத்ரி நகரை சேர்ந்தவர் அண்ணாமலை (52). தொழில் அதிபர். தனியாக நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் மொத்தமாக நூல்களை வாங்கி விற்பனை செய்தும் வந்தார்.இவருக்கு சிகப்பி என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.நேற்று மதியம் தொழில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in