tamilkurinji logo
 

ஜெயலலிதா மரணம் - பாதுகாப்பு அதிகாரி உட்பட 5 பேருக்கு சம்மன்,Jaya death probe summons for perumal samy and poongundran ..tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Jaya,death,probe,summons,for,perumal,samy,and,poongundran,..tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

ஜெயலலிதா மரணம் - பாதுகாப்பு அதிகாரி உட்பட 5 பேருக்கு சம்மன்

First Published : Thursday , 4th January 2018 12:22:33 PM
Last Updated : Thursday , 4th January 2018 12:22:33 PM


ஜெயலலிதா மரணம் - பாதுகாப்பு அதிகாரி உட்பட 5 பேருக்கு  சம்மன்,Jaya death probe summons for perumal samy and poongundran ..tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த ஆணையத்தில் இருந்து இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு ‘சம்மன்’ அனுப்பப்பட்டு உள்ளது.

இவர்களை நேரில் வரவழைத்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை மேற்கொண்டு வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறார்.

விசாரணை ஆணையத்தில் இதுவரை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அண்ணன் தீபக், இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, ஜெயலலிதாவுக்கு ‘எம்பாமிங்’ செய்த சென்னை மருத்துவக் கல்லூரி உடற்கூறுயியல் துறை தலைவர் சுதா சே‌ஷய்யன், ஜெயலலிதாவின் கைரேகைக்கு சான்றழித்த டாக்டர் பாலாஜி, தி.மு.க. பிரமுகர் டாக்டர் சரவணன் உள்பட 25-க்கும் மேற்பட்டவர்கள் விசாரணை கமி‌ஷனில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ அடங்கிய ‘பென் டிரைவ்’வையும் டி.டி.வி. தினகரன் தனது வக்கீல் மூலம் ஆணையத்தில் சமர்பித்துள்ளார்.


இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் சத்யபாமா இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த மருத்துவர்கள் யார்-யார்? அவர்கள் என்னென்ன சிகிச்சை அளித்தனர்? சிகிச்சை குறித்த மருத்துவ அறிக்கை வெளியிட்ட விவரங்கள் அனைத்தும் இவருக்கு தெரியும் என்பதால் அது தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விவரங்கள் கேட்டார்.

இதற்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் சத்ய பாமா கூறிய பதில்களை பதிவு செய்து கொண்டார்.

ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமிக்கு விசாரணை ஆணையம் இன்று சம்மன் அனுப்பி உள்ளது.

வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) அவர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போல் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் 9-ந்தேதி ஆஜராகவும் குடும்ப டாக்டர் சிவக்குமார் 8-ந்தேதியும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


ஜெயலலிதா மரணம் - பாதுகாப்பு அதிகாரி உட்பட 5 பேருக்கு  சம்மன்,Jaya death probe summons for perumal samy and poongundran ..tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
ஜெயலலிதா மரணம் - பாதுகாப்பு அதிகாரி உட்பட 5 பேருக்கு  சம்மன்,Jaya death probe summons for perumal samy and poongundran ..tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
ஜெயலலிதா மரணம் - பாதுகாப்பு அதிகாரி உட்பட 5 பேருக்கு  சம்மன்,Jaya death probe summons for perumal samy and poongundran ..tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குடி போதையில் தகராறு செய்த கணவனை வெட்டிக்கொன்ற மனைவி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, தொண்டமாந்துறையை சேர்ந்தவர் செல்வராஜ் (46). கூலித்தொழிலாளி. இவரது மனைவி லூர்துமேரி(41). இவர்களுக்கு ஜெனிபர் டயானா(24), ஆனந்தி(23) என்ற 2 மகள்கள், ஆண்டனி(21) என்ற மகன் உள்ளனர். ஜெனிபருக்கு திருமணமாகி அருகில் உள்ள அன்னமங்கலத்தில் வசிக்கிறார். தொழுநோயால்

மேலும்...

 ஆர்.கே. நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்தது உண்மைதான்: தினகரன் ஆதரவாளர் ராஜசேகரன்
ஆர்.கே.நகர் வெற்றிக்கு டிடிவி.தினகரன் 20 ரூபாய் டோக்கன் கொடுத்தது உண்மை தான் என்று அவரது ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகரன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் முசிறியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தினகரன் அணியின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரான ராஜசேகரன்,

மேலும்...

 மணல் குவாரிகள் மீதான தடை தொடரும் - தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி
 தமிழகத்தில் செயல்படும் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்தில் மூட வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்ற அமர்வு உறுதி செய்தது. இது தொடர்பாக 3 மாவட்ட ஆட்சியர்கள் தாக்கல் செய்த மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.மலேசியாவில்

மேலும்...

 ராணுவ மரியாதையுடன் தமிழக வீரர் சுரேஷின் உடல் சொந்த ஊரில் அடக்கம்
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரேஷ் உடல் அரசு மரியாதையுடன் இன்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா பகுதியில் எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in