tamilkurinji logo


 

ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் நடிக்க விருப்பம் நடிகை மஞ்சிமா மோகன் ,Manjima Mohan wants to play Jayalalithaa in her biopic | tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Manjima,Mohan,wants,to,play,Jayalalithaa,in,her,biopic,|,tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் நடிக்க விருப்பம் நடிகை மஞ்சிமா மோகன்

First Published : Tuesday , 3rd July 2018 12:33:33 PM
Last Updated : Tuesday , 3rd July 2018 12:33:33 PM


ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் நடிக்க விருப்பம்  நடிகை மஞ்சிமா மோகன்
,Manjima Mohan wants to play Jayalalithaa in her biopic | tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

திரையுலக சாதனையாளர்கள் வாழ்க்கை படங்களாகி வெளிவருகின்றன. மறைந்த சில்க் ஸ்மிதா வாழ்க்கை ‘த டர்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாகி திரைக்கு வந்தது.

சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருது  கிடைத்தது.

நடிகையர் திலகம் என்று பாராட்டு பெற்ற சாவித்திரியின் வாழ்க்கையை தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் படமாக எடுத்து வெளியிட்டனர்.

 சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இந்த படத்துக்கு இரு மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. சஞ்சய்தத் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான சஞ்சு படத்தில் அவரது கதாபாத்திரத்தில் ரன்பீர்கபூர் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் சாதனைகள் நிகழ்த்திய மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் வாழ்க்கையும் படமாகிறது.

மறைந்த ஆந்திர முன்னாள் முதல்–மந்திரியும், பிரபல தெலுங்கு நடிகருமான என்.டி.ராமராவ் வாழ்க்கை படமாகி வருகிறது. இதில் என்.டி.ராமராவாக அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். மலையாள பட உலகில் கவர்ச்சியாக நடித்து முன்னணி நடிகர்கள் படங்களை வசூலில் பின்னுக்கு தள்ளிய ‌ஷகிலாவின் வாழ்க்கையும் படமாக எடுத்துள்ளனர். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

மறைந்த முதல்– அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையையும் படமாக எடுக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இதில் அவரது கதாபாத்திரத்தில் வித்யாபாலன் அல்லது கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என்று பேசப்பட்டது.


இந்த நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் ஜெயலலிதா வாழ்க்கை கதை படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர்  கூறும்போது, ‘‘ஜெயலலிதா வாழ்க்கை கதை படத்தில் அவரது வேடத்தில் நடிக்க ஆசை உள்ளது. ஜெயலலிதாவின் தைரியம் எனக்கு பிடிக்கும். தனது முடிவில் இருந்து எந்த காரணத்துக்காகவும் அவர் பின்வாங்க மாட்டார். அவருடைய தைரியம் எல்லா பெண்களுக்கும் இருக்க வேண்டும்’’ என்றார்.


ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் நடிக்க விருப்பம்  நடிகை மஞ்சிமா மோகன்
,Manjima Mohan wants to play Jayalalithaa in her biopic | tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் நடிக்க விருப்பம்  நடிகை மஞ்சிமா மோகன்
,Manjima Mohan wants to play Jayalalithaa in her biopic | tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் நடிக்க விருப்பம்  நடிகை மஞ்சிமா மோகன்
,Manjima Mohan wants to play Jayalalithaa in her biopic | tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
காவல்துறை அதிகாரியாக பிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது படக்குழு.‘யங் மங் சங்’, ‘லக்‌ஷ்மி’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘காமோஷி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ’பொன் மாணிக்கவேல்’ படத்தில் நடித்து வருகிறார் பிரபுதேவா. இப்படத்தில், காவல்துறை

மேலும்...

 25-வது படமாக ‘சீதக்காதி’ அமைந்தது என் பாக்கியம்: விஜய் சேதுபதி
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சீதக்காதி’. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதிபதியுடன் அவர் இணைந்திருக்கும் இரண்டாவது படம் இது. 80 வயது நாடகக் கலைஞரான அய்யா மற்றும் அவருடைய மகன் குமார் என இரண்டு

மேலும்...

 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார். அதற்கு நிர்வாகிகளை நியமனம் செய்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி உள்ளார். அடுத்த சட்டமன்ற தேர்தலை மட்டுமே குறிவைப்பதால் கட்சி பெயரை அறிவிப்பதை தள்ளிவைத்து விட்டு காலாவை

மேலும்...

 பிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை
பிரபல தமிழ் சீரியல் நடிகை பிரியங்கா தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் சின்னத்திரை நடிகர் நடிகைகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'வம்சம்' உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in