tamilkurinji logo


 

டவுன்லோட் செய்த படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க,




டவுன்லோட் செய்த படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க

First Published : Thursday , 29th December 2011 04:55:31 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

டவுன்லோட் செய்த படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க,

தினமும் இணையத்தில் திரைப்படங்களை பலர் டவுன்லோட் செய்கிறோம். டவுன்லோட் செய்த படங்களை பார்க்க கணிணியில் பல வீடியோ பிளேயர்கள் உள்ளன. உதாரணமாக KM Player , VLC Media Player போன்ற பிளேயர்கள் எவ்வித திரைப்படங்களையும் , வீடியோகளையும் பார்க்க உதவுகின்றன.

சிலருக்கு கணிணியில் பார்ப்பது பிடிக்காது. வீட்டில் டிவியில் பார்க்கவே விரும்புவர். டிவியில் வீட்டில் உள்ளவர்களுடன் அல்லது  நண்பர்களுடன் பார்பதற்க்கு டிவியே சிறந்தது. இதற்கு டிவிடி பிளேயர் துணைபுரிகிறது. தற்போது வரும் டிவிடி பிளேயர்கள் பென் டிரைவ் வசதியோடு வருகிறது. இதன் மூலம் எளிதாக டவுன்லோட் செய்த திரைப்படங்களை பென் டிரைவ் மூலம் எளிதாக டிவிடி பிளேயர் துணை கொண்டு டிவியில் பார்க்கலாம்.

ஆனால் டிவிடி பிளேயர் எல்லா வகை வீடியோகளையும் சப்போர்ட் செய்யாது. பெரும்பாலும் டிவிடி பிளேயர்கள் DivX , XviD கோப்புகளையே சப்போர்ட் செய்யும்.  பலர் .avi என முடியும் வீடியோகளை டவுன்லோட் செய்து விட்டு அது அவர்களது பிளேயரில் ஏன் ஓடவில்லை என தெரியாமல் இருப்பர். நீங்கள்  .avi வீடியோகளை டவுன்லோட் செய்தாலும் அவை எந்த Codec மூலம் உருவாக்கப்பட்டது என்பதே முக்கியம். இங்கு Codec என்பது DivX , XviD ஆகியவை.

டவுன்லோட் செய்த திரைப்படங்களை கீழே உள்ள இரு வழிகளில் டிவிடி பிளேயர் மூலம் நீங்கள் டிவியில் பார்க்கலாம்.

  1. DivX அல்லது XviD சப்போர்ட் செய்யும் டிவிடி பிளேயராக இருந்தால் நேரடியாக படங்களை பென் டிரைவில் காப்பி(copy) செய்தோ அல்லது டிவிடியில்(DVD) பதிவு(write or burn) செய்தோ பார்க்கலாம்.
  2. DivX அல்லது XviD சப்போர்ட் செய்யாத டிவிடி பிளேயராக இருந்தால் படங்களை டிவிடி(DVD) வீடியோ கோப்புகளாக மாற்றியே பார்க்க முடியும்.
நீங்கள் டவுன்லோட் செய்யும் போது DivX , XviD Codec ஆல் உருவாக்கப்பட்ட திரைப்படங்களை டவுன்லோட் செய்தால் வேலை எளிது. அவைகளை அப்படியே உங்கள் பென் டிரைவில் அல்லது டிவிடியில்(DVD) போட்டு டிவிடி பிளேயரில் பார்த்து விடலாம். நீங்கள் டவுன்லோட் செய்யும் தளத்தில் வீடியோவின் விபரம் கொடுத்திருப்பார்கள். உதாரணமாக கீழே உள்ளது போல் கொடுத்திருப்பார்கள்.

Codec Id                    : XVID  
Codec                       : XviD  
Duration (ms)                  : 1h 39mn
Bitrate                             : 860 Kbps
Width                               : 640 pixels
Height                      : 272 pixels
Aspect ratio                : 2.35:1
Framerate                   : 23.976 fps


மேலே உள்ள வீடியோ விபரத்தில் Codec என இருக்கும் இடத்தில் DivX,XviD என இருக்கும் வீடியோகளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். பெரும்பாலும் திரைபடத்தின் பெயரிலேயே கொடுத்திருப்பார் உதாரணமாக கீழே உள்ள திரைபடத்தின் பெயரிலேயே XviD அல்லது DivX என கொடுத்திருப்பார்கள்.
XviD

DivX,XviD தவிர X264,H264 என பல Codec உள்ளன. அவைகள் பெரும்பாலும் டிவிடி பிளேயரில் ஓடாது. தற்போது mkv வடிவ கோப்புகள் மூலம் மிக சிறிய அளவில் தெளிவான திரைப்படங்கள் டவுன்லோட் செய்ய கிடைக்கின்றன. mkv கோப்புகள் டிவிடி பிளேயரில் ஓடாது. mkv கோப்புகள் பெரும்பாலும் X264,H264  Codec பயன்படுத்தியே உருவாகபடுகின்றன. இது மட்டுமே காரணம் இல்லை என்றாலும் X264,H264 Codec மூலம் உருவாக்கப்டும் வீடியோகளை உங்கள் டிவிடி பிளேயர் சப்போர்ட் செய்யாது.mkv கோப்புகளையும் , மற்ற கோப்புகளையும் XviD அல்லது DivX Codec மூல கோப்புகளாக மாற்றி பென் டிரைவில் போட்டு பார்க்கலாம்.

மேலும் DivX,XviD  சப்போர்ட் செய்யாத டிவிடி பிளேயர்களும் உள்ளன. அவ்வகை பிளேயரில் நீங்கள் டவுன்லோட் செய்த படங்களை பார்க்க வேண்டுமானால் அவற்றை டிவிடி(DVD)  வீடியோ கோப்புகளாக மாற்றியே பார்க்க முடியும். அதாவது VOB வீடியோ கோப்புகளாக மாற்றி கீழே உள்ள போல்டர் அமைப்பில் மாற்ற வேண்டும். இதற்கு தனி மென்பொருள் துணை வேண்டும்.
DVD
VIDEO_TS

மேலே உள்ளது போல் AUDIO_TS,VIDEO_TS என இரு போல்டர்களும், VIDEO_TS போல்டர் உள்ளே வீடியோ கோப்புகளும்(2வது படம்) இருக்கும். இதேபோல் நீங்கள் டவுன்லோட் செய்த திரைபடத்தை மாற்றி டிவிடியில் எழுதி(Write or Burn) செய்து பிளேயரில் போட்டு பார்க்கலாம்.

XviD,DviX மூல கோப்புகளாகவும் மற்றும் டிவிடி(DVD) அமைப்பில் கோப்புகளாகவும்(VOB) மாற்ற இலவச மென்பொருள்கள் உள்ளன. அந்த மென்பொருள்களை பற்றியும் , எப்படி மென்பொருள்களை பயன்படுத்தி மாற்றுவது என்பதை பற்றியும் அடுத்த பதிவில் பார்ப்போம்.
- http://browseall.blogspot.com/

டவுன்லோட் செய்த படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க, டவுன்லோட் செய்த படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க, டவுன்லோட் செய்த படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஐந்து ஆண்டுகளில் சாலையில் ஓடும் கூகுளின் தானியங்கி கார்
இன்னும் ஐந்தே ஆண்டில் சாலைகளில் ஓட்டுனர் இல்லாத கார்களை அறிமுகப்படுத்துவோம் என்று கூகுள் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. கூகுள் கடந்த சில ஆண்டுகளாக நடத்திய சோதனை ஓட்டங்களில் 11 சிறு விபத்துக்களை (மனிதர்கள் யாருக்கும் காயம்

மேலும்...

 வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு
வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு‘வாட்ஸ்அப்’ மென்பொருள் தொழில்நுட்பத் தின் மூலம் உலகின் எந்த மூலையில் உள்ளவர்களிட மும், தாங்கள் கையிலுள்ள செல்போன் மூலம் குறுஞ்செய்திகள் மற்றும் படங்களை அனுப்பி தொடர்பு வைத்துக் கொள்ள முடியும். இந்த வாட்ஸ்அப்பை சமூக

மேலும்...

 நொடியில் 4 சாம்சங் காலக்ஸி எஸ் 4 விற்பணை
சாம்சங் நிறுவனத்தின் மொபைல் விற்பனை வரலாற்றில், அண்மையில், ஏப்ரல் 27ல் வெளியான அதி நவீன, கூடுதல் விலையுள்ள, சாம்சங் காலக்ஸி எஸ்4 ஸ்மார்ட் போன் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. விற்பனைக்கு அறிமுகமாகி ஒரு மாதத்திற்குள்ளாகவே, விற்பனை யான போன்களின் எண்ணிக்கை ஒரு

மேலும்...

 வீடியோ எடிட்டிங், ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்...
வணக்கம் நண்பர்களே..! இன்றையப் பதிவில் ஒரு அருமையான வீடியோ எடிட்டிங் மென்பொருளைப் பற்றிப் பார்ப்போம். வீடியோவை எடிட் செய்ய இந்த வகையான மென்பொருள்கள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. அவ்வாறான இலவச மென்பொருள்களில் பயன்மிக்க ஒன்றுதான் Corel VideoStudio Pro X5. இந்த மென்பொருளைப்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in