டிரம்ப் எதிராகப் பெண்கள் வாக்களிக்க வேண்டும் ஒபாமா மனைவி வேண்டுகோள்

டிரம்ப்  எதிராகப் பெண்கள் வாக்களிக்க வேண்டும் ஒபாமா மனைவி வேண்டுகோள்
ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவு பெறுவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அமெரிக்காவில் நவம்பர் 8–ந் தேதி நடக்கிறது.இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தொழில் அதிபரும், பெரும் கோடீசுவரருமான டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிடுகின்றனர். தற்போது அங்கு தேர்தல் பிரசாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

டொனால்டு டிரம்ப் தொடர்ந்து  சர்ச்சைகளில் சிக்கி தவித்து வருகிறார். அந்த வகையில், அவர் கடந்த 2005–ம் ஆண்டு பெண்களைப் பற்றி மிக மோசமாக கருத்து தெரிவித்திருக்கிறார். அப்போது அவர் தான், பெண்களிடம் மோசமாக நடந்து கொண்டது பற்றி குறிப்பிட்டதுடன், பிரபலமாக இருக்கிறபோது ஒருவர் எதையும் செய்யலாம் என கூறி உள்ளார்.


இது தொடர்பாக வீடியோ வெளியானது அவருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. அவர் மன்னிப்பு கேட்டபோதும், அவரது சொந்தக் கட்சியிலேயே அவருக்கு எதிராக புயல் வீசுகிறது.தற்போது தங்களிடம் டிரம்ப் தவறாக நடந்து கொண்டதாக 3 பெண்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் ஹிலாரியை விட டிரம்ப் 8 சதவீத புள்ளிகள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டிக்கான வேட்பாளரான டொனால்டு டிரம்ப்  பெண்களை அவதூறாகப் பேசியதை அமெரிக்கத் முதல் பெண்மணி மிச்செல் ஒபாமா வன்மையாகக் கண்டித்துள்ளார். நியூகோம்ஷயர்-ல் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

டிரம்பின் செயல் அவமதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும்  டிரம்பின் வார்த்தைகளையும் செயல்களையும் பொறுத்துக்கொள்ள முடியாது .அவரின் வார்த்தைகள் அதிர்ச்சியூட்டக்கூடியவை.தலைவர்களுக்கு நாகரீகம் அவசியம்.இது வழக்கமான அரசியல் அல்ல.

வாக்களிப்பது முக்கியம். அதே நேரம்  டிரம்ப் போன்ற வேட்பாளர்களுக்கு எதிராகப் பெண்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டா
https://goo.gl/1JF5Eu


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே