tamilkurinji logo
 

டி.டி.வி.தினகரன் அறிவித்த பொறுப்பை ஏற்க 2 எம்எல்ஏக்கள் மறுப்பு,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> தமிழகம்

டி.டி.வி.தினகரன் அறிவித்த பொறுப்பை ஏற்க 2 எம்எல்ஏக்கள் மறுப்பு

First Published : Saturday , 5th August 2017 12:50:03 PM
Last Updated : Saturday , 5th August 2017 12:50:03 PM


டி.டி.வி.தினகரன் அறிவித்த பொறுப்பை ஏற்க 2 எம்எல்ஏக்கள் மறுப்பு,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

அதிமுக அம்மா அணியின் புதிய நிர்வாகிகளை டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார். 18 அமைப்புச் செயலாளர்களை நியமித்த பின்பு  செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், செந்தில்பாலாஜி, தோப்பு என்.டி. வெங்கடாச்சலம், எஸ்.டி.கே. ஜக்கையன், சி.சண்முகவேலு, மாதவரம் வி.மூர்த்தி, டி.கே.எம். சின்னையா,முக்கூர் சுப்பிரமணியன், ஆர்.மனோகரன் சேலஞ்சர் துரை, கே.டி.பச்சைமால், ஜி.செந்தமிழன், ஆர்.பி. ஆதித்தனு, சாருபாலா தொண்டைமான், எஸ்.காமராஜ், மாணிக்கராஜா ஆகியோர் அதிமுக அம்மா அணி அமைப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து தினகரன் அறிவிப்புக்கு பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் தினகரன் அறிவித்த பதவியை ஏற்க முடியாது என அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டள்ள அறிக்கையில் முதல்வர் எடப்பாடி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், எனக்கு தெரியாமல், தன்னிச்சையாக, தேர்தல் கமிஷனால் ஏற்றுக்கொள்ளப்படாத டிடிவி தினகரன் எனக்கு கட்சியின் மகளிர் அணி இணை செயலாளராக பொறுப்பு அறிவித்துள்ளதாக அறிகிறேன்.

கட்சியும், ஆட்சியும் முதல்வர் எடப்பாடி தலைமையில் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த அறிவிப்பு குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தும் என்பது கட்சி தொண்டர்களின் கருத்து.எனவே இந்த பதவியை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் எடப்பாடிக்கு ஆதரவாக தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக எம்பி, எம், எல்.ஏ.க்கள் அனைவரும் தொடர்ந்து எடப்பாடி தலைமையின் கீழ் உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் சத்யா பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதேபோல தினகரன் நியமித்த பொறுப்பை ஏற்க ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி மறுப்பு தெரிவித்துள்ளார். புரட்சி தலைவி அம்மா பேரவை இணை செயலாளராக ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி நியமிக்கப்பட்டார். இதுகுறித்து பேசிய எம்எல்ஏ பழனி, டி.டி.வி.தினகரன் அறிவித்த பதவிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் திருச்சி செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை விமான நிலையத்தில் எம்எல்ஏ பழனி சந்தித்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டி.டி.வி.தினகரன் அறிவித்த பொறுப்பை ஏற்க 2 எம்எல்ஏக்கள் மறுப்பு,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
டி.டி.வி.தினகரன் அறிவித்த பொறுப்பை ஏற்க 2 எம்எல்ஏக்கள் மறுப்பு,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
டி.டி.வி.தினகரன் அறிவித்த பொறுப்பை ஏற்க 2 எம்எல்ஏக்கள் மறுப்பு,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பெரியபாண்டியன் மரணத்தில் திடீர் திருப்பம் : இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீது வழக்கு
ஆய்வாளர் பெரியபாண்டியனை, மற்றொரு ஆய்வாளர் முனிசேகர் தான் சுட்டார் என்று ராஜஸ்தான் காவல்துறையினர் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது என்று தமிழக போலீஸார் தெரிவித்துள்ளனர்.கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற இடத்தில் குண்டுக் காயம் பட்டு ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் காவல்துறையினர்

மேலும்...

 ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ரூ.100 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்துள்ளது: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஆர்.கே.நகரில் நேற்று மட்டும் அதிமுக மற்றும் தினகரன் அணியால் ரூ.100 கோடி அளவுக்கு பணப் பட்டுவாடா நடைபெற்றுள்ளது என்று விக்ரம் பத்ராவிடம் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் புகார் மனு அளித்துள்ளார்.ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்காக, இந்திய தேர்தல் ஆணையத்தால் சிறப்பு அதிகாரியாக

மேலும்...

 ஆர்.கே.நகர் தொகுதியில் 20 லட்சம் பணம் பறிமுதல்
ஆர்.கே.நகர் தொகுதியில் செல்வி என்பவரிடம் இருந்து ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வருகிற 21ந்தேதி நடைபெறுகிறது.  இதற்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் மும்முரமுடன் ஈடுபட்டு வருகின்றன.இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் 20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும்...

 காதல் திருமணம் செய்த மகளை மொட்டையடித்து சித்ரவதை செய்த தந்தை கைது
மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை தட்டனூரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அபிநயா (வயது 19). அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.அப்போது ஆட்டோ டிரைவர் வெங்கடேஸ்வரன் (25) என்பவருடன் அபிநயாவுக்கு காதல் ஏற்பட்டது. இது பற்றி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in