tamilkurinji logo


 

டீன் ஏஜ் குழந்தைகளை கையாள்வதற்கான சில டிப்ஸ்,Tips for dealing with teenage children

Tips,for,dealing,with,teenage,children




டீன் ஏஜ் குழந்தைகளை கையாள்வதற்கான சில டிப்ஸ்

First Published : Wednesday , 10th July 2013 12:40:29 AM
Last Updated : Friday , 25th November 2016 01:24:50 PM


டீன் ஏஜ் குழந்தைகளை  கையாள்வதற்கான  சில டிப்ஸ்,Tips for dealing with teenage children

வளர்ந்து வரும் குழந்தைகள் `டீன் ஏஜ்' பருவத்தை அடையும்போது, பெற்றோர் என்ற முறையில் அவர்களைப் பற்றி கவலை ஏற்படுவது இயற்கை தான். அவர்களது மனம், உடல், எண்ணம் ஆகியவற்றைப் பாதிக்கும் விஷயங்கள் ஏராளம் உள்ளன.


மேலும் அவர்களால் பெற்றோர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும் ஏராளம். கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னும் அதிகம்.



நீங்கள் எதைச் சொன்னாலும், அதை எதிர்த்துப் பேசினால்தான் அவர்களுக்குத் திருப்தியே! அதையும் மீறி நீங்கள் ஏதேனும் சொன்னால்... ‘மொக்கை போடாதீங்கப்பா... லெக்சர் அடிக்காதீங்கம்மா... உங்களுக்கென்ன தெரியும்?’ என வாயை அடைப்பார்கள்.



அதற்காக அவர்களுக்கு உங்கள் மீது அன்போ, அக்கறையோ இல்லை என அர்த்தமில்லை. அவர்களைப் பொறுத்த வரை தமது சுய சிந்தனைகளை வெளிப்படுத்துவதாகக் கருதுவார்கள். பெற்றோர் தம்மைப் புரிந்துகொள்வார்கள் என்று நம்புவார்கள்.



தம் பெற்றோர் பலமானவர்களாக, தம்மைப் பாதுகாப்பவர்களாக, தம்மை சரியான வழியில் செல்வது எப்படி என்பதை உணரச் செய்பவர்களாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள்.


டீன் ஏஜ் பிள்ளைகளுக்குப் பெற்றோர் சொல்ல வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம் சொல்லலாம். குறிப்பாக உங்கள் பிள்ளை தூங்கத் தயாராகும் இரவு வேளையில் சொல்வது உன்னதம்.


அந்த நேரத்தில் அவர்களுக்கு உங்களை எதிர்த்துப் பேசும் உணர்வு குறைவாக இருக்கும். சொல்லும் விஷயங்களை நினைவிலும் வைத்துக் கொள்வார்கள். ‘


 ‘‘நாங்க உன்னை அளவு கடந்து நேசிக்கிறோம். உன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்ய நாங்க தயாரா இருக்கோம்...’’
 சில நேரங்களில் நாம் வெவ்வேறு வேலைகளில் மூழ்கி விடுகிறோம்.


உறவுகளின் மகத்துவத்தையும் மேன்மையையும் மறந்து போகிறோம். ‘நம்ம குழந்தைங்கதானே... நாங்க அவங்களை நேசிக்கிறோம்னு சொன்னாத்தான் புரியுமா என்ன?’ என நினைக்காதீர்கள்.



வேறு எதனாலும் உணர்த்த முடியாத எத்தனையோ விஷயங்களை வார்த்தைகள் அவர்களுக்கு உணர்த்தும் பல நேரங்களில்!

2உன்கிட்ட எத்தனையோ நல்ல குணங்களும் திறமைகளும் இருக்கு. அதை நினைச்சா எங்களுக்குப் பெருமையா இருக்கு!’’
நீங்கள் பெருமைப்படும் அளவுக்கு உங்கள் பிள்ளையிடம் நிச்சயம் ஏதோ சில விஷயங்கள் இருக்கும்.


அது அடுத்தவருக்கு உதவும் குணமாகவோ, தனித்தன்மையான கலைத்திறனாகவோ, வேறு எதுவாகவோ இருக்கலாம். அதைக் கண்டுபிடித்துப் பாராட்டுங்கள்.


மற்றவர்களிடம் பேசும்போது, உங்கள் குழந்தையிடம் உள்ள நல்ல விஷயங்களை சுட்டிக் காட்டிப் பேசுங்கள். ‘நான் உன்னை நினைச்சுப் பெருமைப்படறேன்’ என்கிற அந்த ஒற்றை வாக்கியம், நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும்

உன் கனவுகள் நிறைவேற நான் கண்டப்பாக உதவுவேன்
அவர்களுக்கென தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும். தனது விருப்பங்கள் கவனிக்கப்படாத, அங்கீகரிக்கப்படாத சூழலில் வளரும் பிள்ளைகள் விரக்தியின் விளிம்பில் இருப்பார்கள்.



 தான் வளர்ந்த வாழ்க்கை முறை, மதம், கலாசாரம் தாண்டி, வேறு ஒரு வாழ்க்கை முறையின் பால் ஈர்க்கப்படுவார்கள். எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்... ‘உன் வாழ்க்கையை நீ விரும்பியபடி அமைத்துக்கொள்ள நிச்சயம் என் ஆதரவு உண்டு’ என நம்பிக்கை கொடுங்கள்.




தவறு செய்ததை ஒப்புக்கொள்வதோ, அதற்காக மன்னிப்பு கேட்பதோ சின்னக் குழந்தைக்குக்கூட ஈகோவை தூண்டும் ஒரு விஷயம்.ஆனால்  நீங்கள் தயங்காமல் உங்கள் குழந்தைகளிடம் மன்னிப்பு கொள்ளுங்கள்..


அதனால் உங்கள் பிள்ளைக்கு உங்கள் மீதான மதிப்பு குறைந்துவிடாது.


மாறாக உங்கள் மீது மரியாதையை இன்னும் அதிகரிக்கவே செய்யும். தமது உணர்வுகளைப் புரிந்துகொள்கிற, தவறை ஒப்புக்கொள்கிற உங்களை கூடுதலாக நேசிக்கவும் மதிக்கவும் வைக்கும்.



 உங்களாலோ, வேறு யாராலோ உங்கள் குழந்தை காயப்படுத்தப்படுகிற ஒவ்வொரு தருணத்திலும் ‘மன்னிப்பு’ கேட்கத் தவறாதீர்கள்.


‘நீ நல்லவ(ன்)னு எனக்கு தெரியும்! நான் உன்னைப்பற்றி எவ்வளவு பெருமைப்படுறேன்னு உனக்குத் தெரியாது!’’
தன்னைப் பற்றி தன் பெற்றோர் உயர்வாக நினைக்க வேண்டும் என்கிற எண்ணம் எல்லா டீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் இருக்கும்.


 நல்லவர், வல்லவர், இனிமையானவர், திறமையானவர் என தாராளமாக உங்கள் பிள்ளையை நீங்கள் புகழ்ந்தீர்களானால், அதுவே அவர்களுக்குள் சுயமரியாதையை அதிகப்படுத்தி, உங்கள் இருவருக்கும் இடையிலான உறவையும் பலப்படுத்தும்.


 தனக்கு நெருக்கமானவர்களிடமிருந்து இத்தகைய அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதில், டீன் ஏஜ் மனதும் கிட்டத்தட்ட பெரியவர்கள் மனது மாதிரிதான்.


உங்கள் பிள்ளை என்னதான் முரடாக இருந்தாலும், ஏதேனும் ஒரு பாசிட்டிவான விஷயத்தைக் கண்டறிந்து, அதைச் சுட்டிக்காட்டிப் பாராட்டிப் பேசுங்கள்.

‘நீ எப்படி இருக்கியோ... அப்படியே நாங்க உன்னை ஏத்துக்கறோம். இந்தக் குடும்பத்துக்கு நீ ரொம்ப முக்கியம். என்று அடிக்கடி சொல'லுங்கள்.


தான், தன் பெற்றோரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு டீன் ஏஜ் பிள்ளைகளிடம் இருக்கும்


.. உண்மை என்னவென்றால், அவர்களுக்குத் தேவை உங்கள் சம்மதமும் அங்கீகாரமும். அவர்கள் மீது அளவுகடந்த, கட்டுப்பாடுகள் அற்ற அன்பைக் காட்டுங்கள்.


அவர்கள் என்ன செய்தாலும், எப்படியிருந்தாலும் அவர்கள் மீதான உங்கள் அன்பை வெளிப்படுத்தத் தயங்காதீர்கள். ‘நான் உன்னை மதிக்கிறேன்’,


 ‘நான் உன்னை ஏத்துக்கறேன்’ என வார்த்தைகளின் மூலமும் அதைப் தெரியப்படுத்தி கொண்டே இருங்கள்.


‘நீதான் எனக்கு முக்கியம். உனக்கு நல்ல அம்மா (அப்பா) வா இருக்கணும்னு நினைக்கிறேன். நான் செய்தது உன்னைக் காயப்படுத்தியிருக்கலாம்.


ஆனா, அது வேணும்னு செஞ்சதில்லை. நான் உன்னை அந்த அளவுக்கு நேசிக்கிறேன். நீ செய்தது எனக்கு பயமா இருந்தது.


அதனாலதான் அப்படி செஞ்சேன். உன்னைப்போல் டீன் ஏஜ் பிள்ளைங்களை வளர்க்கிறது எவ்வளவு கஷ்டம்னு உனக்குக் கல்யாணமாகி, பிள்ளை பிறந்த பிறகு நீ உணர்வே...’’ எல்லா பெற்றோருக்கும், அவர்களது பிள்ளைகள் ஸ்பெஷல்தான்... முக்கியம்தான்.


ஆனால், அதை எத்தனை முறை அவர்களுக்கு உணர்த்தியிருக்கிறீர்கள்? வார்த்தைகளில் அதைக் காட்டுங்கள். ‘கட்டிப்பிடி வைத்தியம்’ செய்யுங்கள்.


 மகனோ, மகளோ வளர்ந்து விட்டார்களே, எப்படிக் கட்டிப்பிடிப்பது என்கிற தயக்கமே வேண்டாம்.

‘உனக்கு என்ன பிரச்னைன்னாலும் தைரியமா என்கிட்ட சொல்லு. என்னவா இருந்தாலும் சரி. நான் உன்னை நம்புறேன்.


அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி, நான் உன்மேல் அளவு கடந்த அன்பை வைத்திருக்கிறேன். எனக்கு உன்னோட பாதுகாப்புதான் முக்கியம்...’’


. எந்தச் சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் குழந்தைகள்  தாம் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற ஏக்கம் நிறைந்துள்ள காலம்.


குழப்பமாக உள்ள இந்த காலத்தில் உங்கள் முழுமையான ஆதரவு உங்கள் குழந்தைக்கு தேவை


. நீங்கள் எப்பொழுது கடைசியாக, ‘நான் உன்னை நம்புகிறேன்’ என்று கூறினீர்கள்? உங்கள் பிள்ளை மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? அதை உங்கள் மகளிடமோ, மகனிடமோ  அடிக்கடி சொல்லுங்கள்.



 ‘‘உன் ஃப்ரெண்ட்ஸ் என்ன செய்யறாங்கன்னு எனக்கு அக்கறையில்லை. நீதான் எனக்கு முக்கியம்...’’ இப்படி சொல்லித்தான் பாருங்களேன்!


. உங்கள் பிள்ளையின் டீன் ஏஜ் பருவம் குறுகிய காலமாக இருக்கலாம். ஆனால், அந்தப் பருவத்தில் உங்கள் பிள்ளைக்கும் உங்களுக்குமான உறவில் ஏற்படுகிற தாக்கம்,


அவர்கள் வளர்ந்த பிறகான வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தைக் காட்டும். பிள்ளைகளிடம் நிறைய பேசுங்கள். அவர்கள் பேசுவதைக் கவனியுங்கள்.


 அடிக்கடி அவர்களை நீங்கள் நேசிப்பதைச் சொல்லுங்கள். கட்டியணையுங்கள். அதே நேரம் அவர்களது கடிவாளமும் உங்கள் கைகளிலேயே இருக்கட்டும்.

டீன் ஏஜ் குழந்தைகளை  கையாள்வதற்கான  சில டிப்ஸ்,Tips for dealing with teenage children டீன் ஏஜ் குழந்தைகளை  கையாள்வதற்கான  சில டிப்ஸ்,Tips for dealing with teenage children டீன் ஏஜ் குழந்தைகளை  கையாள்வதற்கான  சில டிப்ஸ்,Tips for dealing with teenage children
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குழந்தைகளின் மன அழுத்ததினை போக்குவதற்கான வழிகள் | Depression in Children: Symptoms, Causes, Treatments
குழந்தைகள்  சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர்கள்

மேலும்...

 பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லி கொடுக்க வேண்டிய சில விசயங்கள்
குழந்தைகளைப் பயமுறுத்தி வளர்க்கக் கூடாது.  குழந்தையிடம், “ரொம்ப சேட்டை பண்ணினேனா ஸ்கூல்ல கொண்டு தள்ளிடுவேன், என்று கூறக் கூடாது. அப்படி செய்தால் பள்ளிக்கூடம் ஏதோ பயமுறுத்தும் இடம் போலவும், ஆசிரியர்கள் துன்புறுத்துபவர்கள் போலவும் குழந்தைகள் மனதில் பதிந்து விடும்.  பிள்ளைகள் வகுப்பில்

மேலும்...

 குழந்தைகளுக்கு முன்பு பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள்
குழந்தைகள் எதிரில் கணவன் மனைவி இருவரும் சண்டை போடவே கூடாது. இது அவர்கள் மனதை பாதிக்கும் முக்கிய விஷமாகும். மேலும் பெற்றோர்கள் மீது குழந்தைகளுக்கு ஒரு வித வெறுப்பை உண்டாக்கவும் வாய்ப்புகள் அதிகம்.குழந்தைகள் முன்னிலையில் யாரையும் தவறாக பேசக் கூடாது. இது

மேலும்...

 குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கான வழிகள்
* எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், நீங்கள் படிப்பது ஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்.* புரியாமல் எதையும் படிக்ககூடாது. ஒரு வரி புரிய ஒரு நாள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in