டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்தது ஏன்?திடுக்கிடும் தகவல்கள்

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்தது ஏன்?திடுக்கிடும் தகவல்கள்
டெல்லியின் சாந்த் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்தவர்களின் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன

டெல்லியின் வடக்குப்பகுதியில் சாந்த் நகர் புராரி பகுதியைச் சேர்ந்தவர்கள் பவனேஷ் அவரின் சகோதரர் லலித் பாட்டியா. இருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் நேற்று வீட்டில் கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தனர்.

   தற்கொலை செய்துகொண்டதில் வீட்டில் வயது முதிர்ந்த பெண் நாராயண் தேவி(வயது77) தரையில்படுத்தவாறு இறந்திருந்தார். மற்ற 10 பேரும் தூக்கில் தொங்கி இருந்தனர். இதில் நாராயண் தேவியின் இரு மகன்கள் பவனேஷ்(வயது50), லலித் பாட்டியா(45), மகள் பிரதிபா(வயது57).

பவனேஷ் மனைவி சவிதா(வயது48), சவிதாவின் மகள் மீனு(வயது23), நிதி(25), துருவ்(15). லலித் பாட்டியாவின் மனைவி டினா(42). இவரின் 15வயது மகன் சிவம். பிரதிபாவின் மகள் பிரியங்கா (33). இவர்களுக்குக் கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

தற்கொலை செய்து கொண்ட லலித், பவனேஷ் குடும்பத்தினர் வித்தியாசமான வழிபாட்டு முறையைப் பின்பற்றி வந்துள்ளனர். அதற்காகவே வீட்டுக்குள் சிறிய கோயிலைக் கட்டிவைத்து அதில் வழிபட்டுள்ளனர்.

இவர்கள் வழிபாடு மிகவும் புதிராகவும், அதேசமயம் மூடநம்பிக்கை மிகுந்ததாகவும் இருக்கிறது.  ஆனால் இவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நன்கு படித்தவர்கள் என்பதால், மூடநம்பிக்கை உள்ளவர்கள் என்பதை நம்ப உறவினர்களும், நண்பர்களும் மறுக்கிறார்கள்.

ஆனால் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் இருந்து பல்வேறு விஷயங்கள் தெளிவாகிறது. இவர்கள் தற்கொலை செய்யும் நோக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து தயாராகி வந்துள்ளனர். சொர்கத்தை அடையும் வழி என்ற ரீதியில் தற்கொலை செய்துள்ளனர்.


தற்கொலை செய்யும் போது கண்கள், காதுகள், வாய், கை, கால்கள் அனைத்தும் கட்டப்பட்டு இருந்தன. தற்கொலை செய்யும் முறை கூட அந்த டைரியில் எழுதப்பட்டுள்ளது. எங்களின் முதல் கட்டவிசாரணையில் நாராயண் தேவியை முதலில் அவரின் இரு மகன்களும் கொலை செய்துவிட்டு, மனைவிகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளனர். அதன்பின் குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு, இறுதியாக தாங்களும் தூக்குமாட்டி இறந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம்.

தற்கொலை செய்வதற்கு முன் அன்று இரவு வீட்டில் உணவு சமைக்காமல் கடையில் இருந்து உணவு வாங்கிவந்து சாப்பிட்டுள்ளனர். வீட்டில் வளர்த்து வந்த நாயை மொட்டைமாடியில் கட்டிவிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

அவர்கள் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் சொர்கத்தை அடையும் வழி என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எழுதப்பட்டுள்ளது. அதில் தற்கொலை செய்வது வியாழக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைதான் செய்ய வேண்டும்.

தற்கொலை செய்யும் போது, விளக்குகள் அனைத்தும் குறைந்த வெளிச்சத்தில் இருக்க வேண்டும். நள்ளிரவு 12 மணியில் இருந்து ஒரு மணிக்குள்தான் தற்கொலை இருக்க வேண்டும். தற்கொலை செய்யும் போது, அனைவரின் கண்களும் கட்டப்பட வேண்டும், பூஜ்ஜியத்தைத் தவிரவேறு எதையும் பார்க்கக் கூடாது.

தற்கொலைக்குப் புடவை அல்லது கயிறு பயன்படுத்தலாம். வீட்டில் இருக்கும் பாட்டியை தரையில் கீழே படுக்கவைத்து தற்கொலை செய்யவைக்கலாம் என்று எழுதப்பட்டுள்ளது.


தற்கொலை செய்து கொண்டவர்கள் குறித்து அவர்களின் உறவினர்களிடம் கேட்டறிந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்

 
இந்தக் குறிப்புகள் அனைத்தும் கடந்த மாதம் 26-ம் தேதி எழுதப்பட்டு, ஜூன் 30-ம் தேதி இரவு அனைவரும் கடவுளைச் சந்திக்கச் செல்கிறோம். தற்கொலை செய்யும் போது அனைவரும் நாற்காலியைப் பயன்படுத்த வேண்டும். கைகள், கால்கள், வாய்,கண்கள் கட்டப்பட்டு இருந்தால்தான் சொர்கத்தை அடைய முடியும் என அந்த டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் 11 பேரும் தாங்கள் இறந்தபின் தங்களுடைய கண்களைத் தானமாக வழங்கிவிடுங்கள். 22 பேருக்கு பார்வைகிடைக்க நாங்கள் உதவியாக இருப்போம். இது எங்களுடைய விருப்பம் எனவும் தெரிவித்துள்ளனர்.


19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்

06 Feb 2019

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உயர் நீதிமன்றம் உத்தரவு

02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை