டெல்லியில் காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு நவ.12 வரை விடுமுறை அறிவிப்பு

டெல்லியில் காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு நவ.12 வரை விடுமுறை அறிவிப்பு

டெல்லியில் காற்று மாசு அதிகமாக உள்ளதால் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் தற்போது குளிர்காலம் தொடங்கி விட்டது.


இதனால் நள்ளிரவுக்கு மேல் பனிப்பொழிவும் உள்ளது. இந்த தாக்கத்தின் காரணமாக கடந்த 2 நாட்களாக காற்றில் மாசு அதிகமாக காணப்படுகிறது.


இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நிலைமை மோசம் அடைந்தது. மெல்லிய போர்வை போன்ற அடர்த்தியான மாசு நகரை சூழந்து இருந்தது. அதாவது சராசரி அளவை விட பல மடங்கு மாசு காற்றில் அதிகரித்து காணப்பட்டது.

இதுபற்றி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில், நகரில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டி உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தது.


இதையடுத்து இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் கே.கே.அகர்வால் மற்றும் தலைமைச் செயலாளர் ஆர்.என்.தாண்டன் ஆகியோர் டெல்லி மாநில துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பினர்.

அதில் டெல்லி நகரில் காற்றின் தரம் குறைந்த நிலையில் இருந்து மிகவும் மோசம் என்னும் நிலையை எட்டி உள்ளது.


இதனால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர்களின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்படலாம். எனவே பள்ளிகளில் திறந்தவெளி மற்றும் உள்ளரங்க மைதானங்களில் விளையாட்டு உள்ளிட்ட குழந்தைகளுக்கான எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தவேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து கெஜ்ரிவால் உத்தரவின் பேரில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை நடத்திய துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா, துவக்க பள்ளிகள் அனைத்திற்கும் இன்று விடுமுறை அளிக்கப்படும் எனவும், காற்று மாசு குறித்து பெறும் அறிக்கையின் அடிப்படையில், விடுமுறை நாட்கள் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.


இந்த நிலையில், டெல்லியில் காற்றின் மாசு அளவு அபாயகரமான அளவில் இருப்பதையடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
https://goo.gl/vweMpb


16 Oct 2018

நாளை நடைதிறப்பு - சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு

11 Oct 2018

மசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு

10 Oct 2018

சிறுமி பலாத்காரம் “என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்

19 Sep 2018

இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்

18 Sep 2018

தெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை

14 Sep 2018

பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்றார் மோடி; ஆனால் என் மகளுக்கு பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர்

14 Sep 2018

8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்

13 Sep 2018

விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற அருண் ஜெட்லி மறைமுக உதவி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

08 Sep 2018

சர்ச்சையில் சிக்கிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் உயிருடன் இருக்கும் நடிகை சோனாலி பிந்த்ரேக்கு இரங்கல்

30 Aug 2018

பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிய மாணவர்