tamilkurinji logo


 

டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக நடித்த வாலிபர் கைது,Delhi man pretends to be doctor in AIIMS for 5 months, police say surprised by his knowledge of medicines

Delhi,man,pretends,to,be,doctor,in,AIIMS,for,5,months,,police,say,surprised,by,his,knowledge,of,medicines




செய்திகள் >>> இந்தியா

டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக நடித்த வாலிபர் கைது

First Published : Monday , 16th April 2018 08:14:45 PM
Last Updated : Monday , 16th April 2018 08:14:45 PM


டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில்   மருத்துவராக நடித்த வாலிபர் கைது,Delhi man pretends to be doctor in AIIMS for 5 months, police say surprised by his knowledge of medicines

டெல்லி ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியானது இந்தியாவிலேயே முன்னணி மருத்துவமனையாக உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரம் பயிற்சி டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.


இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக மருத்துவ மாணவர் என்ற போர்வையில் அங்கு சுற்றிவந்த 19 வயது இளைஞர் அத்னான் குர்ராம் போலீசிடம் சிக்கியுள்ளார்.

வெள்ளை கோட், ஸ்டெதஸ்கோப் சகிதம் தினமும் ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் ஆஜராகும் அத்னான் குர்ராம் அனைவரிடமும் தன்னை ஒரு பயிற்சி டாக்டர் என அறிமுகப்படுத்தியுள்ளார்.


பயிற்சி டாக்டர்களிடம் தான் ஒரு முதுகலை மாணவர் என அறிமுகமாகியுள்ளார். 2 ஆயிரத்திற்கும் அதிகமான பயிற்சி டாக்டர்கள் அங்கு இருப்பதால் அவரின் மீது அங்கு யாருக்கும் சந்தேகம் வரவில்லை.

டாக்டர்கள் பங்கேற்கும் கருத்தரங்கு, பயிற்சி டாக்டர்களின் வாட்ஸ் அப் குரூப் உள்ளிட்டவற்றிலும் அத்னான் குர்ராம் இருந்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் அனைத்து பயிற்சி டாக்டர்கள் பங்கேற்ற மராத்தான் போட்டி மருத்துவமனை வளாகத்தில் நடந்துள்ளது. அங்கும் அத்னான் குர்ராம் ஆஜராகியுள்ளார்.


அப்போது, மற்ற டாக்டர்கள் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளனர். குர்ராமின் பதிலில் சந்தேகம் அடைந்ததை அடுத்து அவர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர்.

இதனை அடுத்து, குர்ராம் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பேசிய போலீஸ் அதிகாரி, “குர்ராமின் மருத்துவ ஞானம்  எங்களுக்கு வியப்பை அளிக்கிறது.


தன் மீது எந்த சந்தேகமும் வராத வண்ணம் அவர் நடந்து கொண்டுள்ளார். மருத்துவர்கள் கூடவே எப்போதும் இருப்பதை குர்ராம் விரும்பியுள்ளார்” என தெரிவித்தார்.

பீகார் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட குர்ராம் தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஸ்டெதஸ்கோப், வெள்ளை கோட் அணிந்து பல புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

எந்த குற்ற பிண்ணனியும் இல்லாத குர்ராம் எதற்காக டாக்டராக நடித்து வந்தார் என்பது தொடர்பாக விசாரித்துவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில்   மருத்துவராக நடித்த வாலிபர் கைது,Delhi man pretends to be doctor in AIIMS for 5 months, police say surprised by his knowledge of medicines டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில்   மருத்துவராக நடித்த வாலிபர் கைது,Delhi man pretends to be doctor in AIIMS for 5 months, police say surprised by his knowledge of medicines டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில்   மருத்துவராக நடித்த வாலிபர் கைது,Delhi man pretends to be doctor in AIIMS for 5 months, police say surprised by his knowledge of medicines
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை

மேலும்...

 நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணிஇல்லை : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி

மேலும்...

 ஜிவாதான் என் மனஅழுத்தத்தைப் போக்குபவள்: தோனி உருக்கம்
என் மகள் ஜிவாதான் என் மனஅழுத்தத்தை போக்கும் மருந்து, மூன்றரை வயதிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார் என்று மகேந்திர சிங் தோனி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்தோனியின் மூன்றரை வயது மகள் ஜிவா. சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்

மேலும்...

 கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழையால் அம்மாநில அணைகள் விரைவாக நிரம்பி வருவதால் கபினி அணையில் இருந்து 70,000 கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கனஅடி என கர்நாடக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in