டெஸ்டில் ஸ்டெயின் புயலை சமாளிக்குமா இந்தியா???

டெஸ்டில் ஸ்டெயின் புயலை சமாளிக்குமா இந்தியா???
டெஸ்ட் தொடரில் இந்திய அணியை மிரட்ட வருகிறார் தென் ஆப்ரிக்க "வேகப்புயல்' ஸ்டைன். இவரை, நம்மவர்கள் சமாளிப்பார்களா அல்லது சரணடைவார்களா என்பதே "மில்லியன் டாலர்' கேள்வியாக உள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டிகளிலும் 141, 134 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. மூன்றாவது போட்டி மழையால் ரத்தாக, 0-2 என, தொடரை இழந்தது.

அடுத்து, இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோத உள்ளன. முதல் டெஸ்ட் வரும் 18ம் தேதி ஜோகனஸ்பர்க்கில் துவங்குகிறது. இதற்கு தயாராகும் விதத்தில் நடக்க இருந்த இரண்டு நாட்கள் பயிற்சி போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இதனால், ஒருநாள் தொடரைப் போல, பயிற்சியே இல்லாமல் நேரடியாக டெஸ்ட் போட்டியில் களமிறங்க வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. புஜாரா, முரளி விஜய் போன்றவர்களுக்கு தேவையான பயிற்சி கிடைக்கவில்லை. இவர்கள், ஸ்டைன், மார்கல், பிலாண்டர் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்களை எப்படி சமாளிக்கப் போகின்றனர் என்பது தான் கவலையாக உள்ளது.

சச்சின், டிராவிட், லட்சுமண் போன்ற ஜாம்பவான்கள் இந்திய அணியில் இருந்த போதே மிரட்டியவர்கள் ஸ்டைன், மார்கல். இப்போது இவர்கள் யாரும் இல்லாமல் களமிறங்கும் இந்திய அணிக்கு கூடுதல் நெருக்கடி காத்திருக்கிறது.

ஏனெனில், புதிய பந்தை அசுரவேகத்தில் வீசும் போது, கூடவே "சுவிங்' செய்வதால், இந்திய அணியின் இளம் வீரர்கள் தற்காப்பு ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்த முடியும்.

சர்வதேச ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 5,000 ரன்களை கடந்த, வெஸ்ட் இண்டீசின் ரிச்சர்ட்ஸ் சாதனையை சமன் செய்த விராத் கோஹ்லி, ஒருநாள் அரங்கில் 200 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா போன்ற வீரர்களுக்கு சிக்கல் தான்.

ஸ்டைன் தனது சிறந்த பந்துவீச்சை (51 ரன்னுக்கு 7 விக்.,) இந்தியாவுக்கு எதிராகதான் பதிவு செய்துள்ளார். தவிர, இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய தென் ஆப்ரிக்க பவுலர்கள் வரிசையில், இரண்டாவது இடத்தில் (10 டெஸ்ட், 53 விக்.,) உள்ளார். முதலிடத்தில் ஆலன் டொனால்டு (11 டெஸ்ட், 57 விக்.,) உள்ளார்.

பிறகு பார்க்கலாம்: இதுகுறித்து தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் கேப்டன் வெசல்ஸ் கூறுகையில்,""வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் "வேகப்புயல்' மால்கம் மார்ஷல் (81 டெஸ்ட், 376 விக்.,) போல, ஸ்டைன் செயல்படுகிறார். அவரைப் போல வேகத்துடன் நன்கு "சுவிங்' செய்கிறார். இதை சமாளிக்க, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சற்று கால அவகாசம் தேவைப்படும். இதனால், டெஸ்ட் தொடர் முடிந்த பின் தான், இந்திய வீரர்களின் உண்மையான திறனை மதிப்பிட முடியும்,''என்றார்.
https://goo.gl/khkKVj


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்