டொனால்டு டிரம்ப் எங்களை தவறான முறையில் தொட்டார் நியூயார்க் டைம்சுக்கு பேட்டி அளித்த 2 பெண்கள்

டொனால்டு டிரம்ப் எங்களை தவறான முறையில் தொட்டார் நியூயார்க் டைம்சுக்கு பேட்டி அளித்த  2 பெண்கள்

டிரம்ப் எங்களை தவறான முறையில் தொட்டார் என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு இரு பெண்கள் பேட்டி அளித்து உள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாக்குப்பதிவுக்கான நாள் நெருங்கி வருவதால் அங்கு பிரசாரத்தில் அனல் வீசுகிறது.

குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடுகிற டொனால்டு டிரம்ப் (வயது 70), தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவர் கடந்த 2005–ம் ஆண்டு பெண்களைப் பற்றி மிக மோசமாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

அதில் அவர், பெண்களிடம் தான் மோசமாக நடந்து கொண்டது பற்றி குறிப்பிட்டதுடன், பிரபலமாக இருக்கிறபோது எதையும் ஒருவர் செய்யலாம் என கூறி உள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் டிரம்புக்கு சொந்தக்கட்சியான குடியரசு கட்சியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. தலைவர்கள் பலரும் அவருக்கு அளித்துள்ள ஆதரவை திரும்பப் பெற்றதுடன், போட்டியில் இருந்து அவர் விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மன்னிப்பு கோரிய டிரம்ப், ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலகப்போவதில்லை என்று  திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

இந்நிலையில் டிரம்பிற்கு மேலும் சிக்கலாக இரு பெண்கள், அவர் தங்களை தவறான முறையில் தொட்டார் என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்து உள்ளனர். ஆனால் டிரம்பின் செய்தித் தொடர்பாளர் இந்த குற்றச்சாட்டை நிராகரித்து உள்ளார்.
இது கற்பனை என்று கூறிஉள்ளார். கடந்த 1980-ம் ஆண்டு நியூயார்க் சென்ற விமானத்தில் டிரம்ப் தன்னிடம் எவ்வாறு தவறாக நடந்துக் கொண்டார் என்பதை ஜெசிகா லீட்ஸ் விவரித்து உள்ளார். மன்ஹாட்டனில் கடந்த 2005-ம் ஆண்டு ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வரவேற்பாளராக பணியாற்றியபோது டிரம்ப் என்னுடைய உதட்டில் நேரடியாக முத்தமிட்டார் என்று ரேச்சல் கரூக் என்ற மற்றொரு பெண் பேட்டி அளித்து உள்ளார்.

பேட்டியில் இருபெண்களும் தங்களிடம் டிரம்ப் நடந்துக் கொண்ட விதத்தை முழுமையாக விவரித்து உள்ளனர். ஆனால் எப்போதும் போல டிரம்ப் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக ராய்ட்டர்ஸ் பத்திரிக்கை, டிரம்ப் பிரச்சாரம் குழு மூத்த ஆலோசகர் ஜேசன் மில்லரை நாடியது.  ஜேசன் மில்லர் பேசுகையில், மொத்த கட்டுரையும் கற்பனையானது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள டிரம்ப் தயார் ஆகிவருகிறார் என்று குறிப்பிட்டு உள்ளார்.
https://goo.gl/Lzrcsa


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே