தனக்குத் தானே ஆபரேஷன் செய்து கொண்ட இன்ஜினியர்

தனக்குத் தானே ஆபரேஷன் செய்து கொண்ட இன்ஜினியர்

இங்கிலாந்தில் வசிக்கும் இன்ஜினியரான கிரஹாம் ஸ்மித்துக்கு, கடந்த 15 வருடங்களுக்கு முன் வயிற்றில் ஆபரேஷன் செய்யப்பட்டது.


அன்று முதல் அவரால் இயல்பாக செயல்பட முடியவில்லை. சமீபத்தில் ஆபரேஷன் செய்த இடத்தில் பெரிதாக வீக்கம் ஏற்பட்டது.


அவர் மருத்துவமனைக்கு சென்றபோது, ஆபரேஷன் செய்வதற்கு வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்டார். இந்நிலையில், தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்தால் என்ன என ஸ்மித்துக்கு தோன்றியது.

உடனே தன் பல் டாக்டர் நண்பரிடம் கத்தி மற்றும் தையல் போடுவதற்கான பொருட்களையும் வாங்கி, தனக்குத் தானே வீங்கியிருந்த பகுதியை கத்தியால் கிழித்தார்.

அப்பகுதியில் சுமார் 8 மிமீ அளவுள்ள நைலான் நூலை வெளியே எடுத்தார். பின்னர் கத்தியால் கிழித்த பகுதியில் 12 தையல்கள் போட்டு ஸ்மித் ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்தார்.

ஒருவர் மருத்துவ அறிவு இல்லாமல், இப்படி தனக்குத்தானே ஆபரேஷன் செய்து கொள்வது, அவருக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அத்துடன் பிற உறுப்புகளிலும் நோய்த்தொற்று ஏற்படலாம்.

ஒருவர் தானாக ஆபரேஷன் செய்வதோ, பிறருக்கு மேற்கொள்வதோ மிகவும் கண்டிக்கத்தக்கது’ என்று ஸ்மித்தின் நடவடிக்கைக்கு இங்கிலாந்து மருத்துவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
https://goo.gl/3jDSkR


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே